செய்திகள் மலேசியா
3000 விளக்குகளில் மீண்டும் ஒளிர்கிறது ஸ்ரீ காடிங்
பத்து பஹாட்:
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமைதியாக இருந்த பத்து பஹாட் அருகிலுள்ள ஸ்ரீ காடிங், கம்போங் பாரு நுழைவாயில் அய்டில்ஃபித்ரி பெருநாளை முன்னிட்டு 3000 எண்ணெய் விளக்குகளுடன் மீண்டும் ஒளி பெற்றுள்ளது.
“மஸ்ஜித் பெலித்தா” என அழைக்கப்படும் இந்த விளக்குக் கதவு, குறிப்பாக பத்து பஹாட் பகுதியில் அடையாளமாகக் கருதப்படுவதுடன், புதிய வடிவமைப்பில் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விளக்குக் கதவு முதலில் 2020ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்ட மரத்தால் கட்டப்பட்டது. ஆனால் அந்த கட்டுமானப் பொருட்கள் 2024ஆம் ஆண்டில் சேதமடைந்து மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்தன என்று கெங் சும்பு தலைவர் முஹம்மத் அசாம் இஸ்னின் தெரிவித்தார்.
இதனால் கிராம மக்கள் இரும்பைப் பயன்படுத்தி புதிய கட்டுமானத்தை உருவாக்குவதற்கான மாற்று முயற்சியை மேற்கொண்டனர். மேலும் அதனுடன் கூடுதல் அலங்காரங்களும் சேர்க்கப்பட்டன.
கட்டுமானத்தின் உயரம் 25 அடி இருந்து 35 அடியாக உயர்த்தப்பட்டதுடன், இதை முடிக்க ஐந்து மாத கால அவகாசம் எடுத்தது என்றார் அவர்.
“அல்ஹம்துலில்லாஹ், திட்டமிட்டபடி இந்தக் கட்டுமானம் முடிந்தது. இதனால் பொதுமக்கள் இங்கு வந்து பார்வையிடும் வாய்ப்பும் கிடைக்கிறது.
“இந்தப் பெலித்தா நுழைவாயில் 'malam tujuh likur' காலத்தில் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயங்கும்,” என்று அவர் கூறினார்.
நேற்று இரவு கம்போங் பாருவில் நடைபெற்ற 'Gerbang Pelita MADANI Parlimen Sri Gading' திறப்பு விழாவில் அவரைச் சந்தித்தபோது அவர் இதைத் தெரிவித்தார். இந்த நிகழ்வை ஸ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் அமினோல்ஹுடா ஹசான் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 16, 2026, 2:46 pm
ஜம்ரி வினோத் இன்று குற்றம்சாட்டப்படவில்லை
March 16, 2026, 1:44 pm
பாரிஸ்க்கு பயணம் செய்யும் மலேசியர்கள் வழிப்பறி திருடர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: தூதர்
March 16, 2026, 1:42 pm
இனவெறி அறிக்கைகளால் இன நல்லிணக்கத்தை சீர்குலைப்பது கண்டிக்கத்தக்கது: கணபதிராவ்
March 16, 2026, 1:41 pm
அம்னோவில் மீண்டும் சேர்வதற்கான மேல்முறையீட்டு கடிதத்தை கைரி சமர்ப்பித்தார்
March 16, 2026, 1:39 pm
பெட்டாலிங் ஜெயாவில் நகைக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற ஆயுதமேந்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்
March 16, 2026, 1:38 pm
ரோஸ்மாவின் ஊழல் மேல்முறையீட்டு விசாரணை: ஜூலை 1 முதல் 3 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
March 16, 2026, 1:37 pm
தம்பூன் முனீஸ்வரர் ஆலயம் புதிய இடத்திற்கு இடமாற்றம்: பக்தர்கள் மகிழ்ச்சி
March 16, 2026, 1:03 pm
