நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெட்டாலிங் ஜெயாவில் நகைக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற ஆயுதமேந்திய நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

பெட்டாலிங்ஜெயா:

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள நகைக் கடையில்  இன்று காலை  கொள்ளையடிக்க முயன்றபோது கூர்மையான ஆயுதம் ஏந்திய ஒருவர் சுடப்பட்டு பலத்த காயமடைந்தார்.

காலை 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்ததாக நம்பப்படும் சந்தேக நபர், நகைக் கடையைத் திறந்திருந்தும் ஆட்கள் இல்லாத நேரத்தில் அங்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தின் போது, ​​சந்தேக நபர் ஒரு பாதுகாப்புக் காவலருடன் சண்டையிட்டதாகவும், பின்னர் தனது நண்பர் காயமடைந்ததை உணர்ந்த மற்றொரு பாதுகாப்புக் காவலர், சந்தேக நபர் மீது இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் நம்பப்படுகிறது.

பலத்த காயமடைந்த சந்தேக நபர் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறிது நேரத்திற்கு முன்பு இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் நகை இழப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

தற்போது வரை, பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் தலைமையகம் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset