செய்திகள் தமிழ் தொடர்புகள்
18 ஆண்டுகாலக் காத்திருப்பு முடிவுக்கு வந்தது: வேளச்சேரி - பரங்கிமலை இணைக்கும் இரயில் சேவை இன்று முதல் தொடக்கம்
சென்னை:
தென் சென்னை மக்களின் பல ஆண்டுகால கனவுத் திட்டமான வேளச்சேரி-பரங்கிமலை இடையேயான இரயில் சேவை, 18 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது.
நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சட்டப் போராட்டங்கள், பல்வேறு தொழில்நுட்பச் சிக்கல்களால் முடங்கிக் கிடந்த இத்திட்டம், தற்போது வெற்றிகரமாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த விரிவாக்கத்தின் மூலம், வேளச்சேரியில் இருந்து செல்லும் இரயில் இனி ஆதம்பாக்கம் வழியாகப் பரங்கிமலை நிலையத்தை வந்தடையும். இதன் மிக முக்கிய சிறப்பம்சமாக, பரங்கிமலை இரயில் நிலையம் ஒரு 'ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையமாக' மாறியுள்ளது.
இங்கு மெட்ரோ இரயில், கடற்கரை-செங்கல்பட்டு மின்சார இரயில் என மூன்று விதமான இரயில் சேவைகளும் ஒரே இடத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சேவையின் தொடக்கம் காரணமாக, வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதி மக்கள் போக்குவரத்து நெரிசலின்றி மிக எளிதாகப் பரங்கிமலை, சென்னையின் மற்ற பகுதிகளுக்குப் பயணம் செய்ய முடியும்.
குறிப்பாக, பரங்கிமலை மெட்ரோ நிலையத்துடன் இந்த இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், அலுவலகம் செல்வோருக்குப் பயண நேரம் வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளதால், சென்னைவாசிகள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். முதற்கட்டமாக இரயில்கள் இயக்கப்படும் கால அட்டவணையைத் தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் முழுமையான செயல்பாடானது, ஜி.எஸ்.டி (GST) சாலையின் போக்குவரத்து நெரிசலைத் தணிக்கப் பெரிதும் உதவும் என போக்குவரத்து வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
May 24, 2026, 12:48 pm
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
May 22, 2026, 11:25 am
தமிழ் முஸ்லிம் எழுத்தாளர்களின் கால்நூற்றாண்டு சிறுகதைத் தொகுப்புகள்
May 21, 2026, 5:18 pm
பதவியேற்பு நிகழ்வில் இன்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்கு தள்ளப்பட்டது
May 21, 2026, 4:35 pm
தமிழக அமைச்சராகிறார் ஷாஜகான்: காதர் மொஹைதீன் அறிவிப்பு
May 21, 2026, 1:05 pm
தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற 2 காங். எம்எல்ஏக்கள் உள்பட 23 பேர்
May 20, 2026, 9:42 pm
தவெக அமைச்சரவையில் ஐயூஎம்எல்?: காதர் மொஹைதீன் விளக்கம்
May 20, 2026, 12:02 pm
