நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழக அரசை கண்டித்து 12-ஆம் தேதி தவெக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம் 

சென்னை: 

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு முடிவுகட்ட வேண்டும், மற்றும் போதை பொருட்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தவெக சார்பில் 12-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மாவட்ட தலைநகரங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக 10-ஆம் தேதி (நாளை) வேட்பாளர்களுக்கான நேர்காணலை தவெக தலைவர் விஜய், நடத்துகிறார். பனையூர், தவெக தலைமை அலுவலகத்தில் நடக்கும் இந்த நேர்காணலில் வேட்பாளர்களை நேரடியாக விஜய் சந்தித்து கலந்துரையாடி தேர்வு செய்வார் என்று கூறப்படுகிறது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset