செய்திகள் மலேசியா
‘KTMB’ தண்டவாளத்தில் மின்சாரக் கேபிள்களைத் திருடிய 3 வெளிநாட்டினர் கைது
சுபாங் ஜெயா:
சுபாங் ஜெயா, பத்து தீகா இடையிலான ரயில்வே தண்டவாளப் பகுதியில் அத்துமீறி நுழைந்து, மின்சாரக் கேபிள்களைத் திருட முயன்ற மூன்று வெளிநாட்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று நள்ளிரவு சுமார் 12.45 மணியளவில், சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் குறித்துக் கிடைத்த தகவலையடுத்து, கே.டி.எம்.பி (KTMB) துணைப் போலீஸ் படையினர் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், கேபிள்களை வெட்டிக் கொண்டிருந்த அந்த மூவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். அவர்களிடமிருந்து கேபிள்களை வெட்டப் பயன்படுத்திய கருவிகள், மூன்று கைப்பேசிகள், இரண்டு மோட்டார் சைக்கிள் சாவிகள், பணப்பைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர்கள் மேலதிக விசாரணைக்காக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ரயில்வே தண்டவாளப் பகுதிகளில் அத்துமீறுவதும், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவதும் 1991-ஆம் ஆண்டு ரயில்வே சட்டம், 2010-ஆம் ஆண்டு நிலப் பொதுப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும் என கே.டி.எம்.பி எச்சரித்துள்ளது.
ரயில்வே கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தொடர்ந்து ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பகுதிகளில் இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செயல்கள் நடந்தால், பொதுமக்கள் உடனடியாக 03-2263 1194 என்ற எண்ணிற்கு அழைத்து தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 11:53 pm
அசாம் பாக்கி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: ரபிசி
March 13, 2026, 11:52 pm
ரவாங்கில் ஆலய இடிப்புப் பணிகளை நிறுத்த செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு
March 13, 2026, 11:52 pm
வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறையை அனைத்து இடங்களிலும் செயல்படுத்த முடியாது: சைட் ஹுசைன்
March 13, 2026, 6:54 pm
மலாயாவின் முதல் பெண் தலைமை நீதிபதி சித்தி நோர்மா யாகோப் காலமானார்
March 13, 2026, 6:33 pm
சிலிம்ரீவர் ஸ்ரீ மகா லெட்சுமி ஆலயத்தின் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது: டத்தோ சிவக்குமார்
March 13, 2026, 5:35 pm
ஈகைப் பெருநாளை முன்னிட்டு கிளாந்தானுக்கு செல்லும் பயணச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன
March 13, 2026, 5:34 pm
