நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துன் டாய்ம் குடும்பம் சம்பந்தப்பட்ட அறிக்கை தொடர்பில் போலிசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்: வான் சைபுல்

கோலாலம்பூர்:

துன் டாய்ம்  ஜைனுடின் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட அறிக்கை, அனைத்துலக ஊடக கையாளுதல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க போலிசார் தனக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

தாசெக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைபுல் வான் ஜான் தெரிவித்தார்.

வான் சைபுல் தனக்கு ஏன் சம்மன் அனுப்பப்பட்டது என்பது தனக்குத் தெரியவில்லை .

இந்த நடவடிக்கை எதிர்க்கட்சியை இந்த விவகாரத்தில் இணைக்கும் முயற்சியா என்றும் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகளைக் கையாளும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124பிஇன் கீழ் விசாரணையை அவர் விமர்சித்தார்.

மேலும் இது ஒற்றுமை அரசாங்கத்தால் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக விவரித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset