நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இனம், மத உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்: பொதுமக்களுக்கு அறிவுரை

ஈப்போ: 

சமூகத்தில் பிளவை ஏற்படுத்தக்கூடிய இன, மத உணர்வுகளைத் தூண்டவதையோ அல்லது பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும் என்றும், சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மலேசியா அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நிர்வகிக்கப்படும் நாடாகும்.
எந்தவொரு நுணுக்கமான பிரச்சினைகளாக இருந்தாலும் அவற்றை முறையான சட்ட நடைமுறைகளின் மூலம் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடமே முழுமையாக விட வேண்டும் என்று நிதி அமைச்சரின் அரசியல் செயலாளர் முஹம்மத் கமில் அப்துல் முனிம் கூறினார்.

“சட்ட அமலாக்கம் என்பது எந்த ஒரு தரப்பும் தன்னிச்சையாக மேற்கொள்ளக்கூடிய ஒன்று அல்ல,” என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பொய்யான செய்திகள், பழிச் சுமத்தல்களைத் தவிர்க்க சமூக ஊடகங்களில் பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

நுணுக்கமான பிரச்சினைகளைப் பயன்படுத்தி கவனம் பெற முயற்சிக்கும் சிறுபான்மை குழுக்களால் பாதிக்கப்பட வேண்டாம் என்றும் முஹம்மத் கமில் எச்சரித்தார்.

“இந்த பிரச்சினையைப் பெரிதுபடுத்தும் மக்கள் ஐந்து சதவீதம் மட்டுமே இருந்தாலும், இந்தச் சிறிய குழுவே பெரும் சத்தத்தை உருவாக்குகிறது,” என்று அவர் கூறினார்.

இதனால் பொதுமக்களிடையே தவறான கருத்துகள் உருவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரமலான் புனித மாதத்தை முன்னிட்டு ஆன்மீக உணர்வையும் உண்மையைத் தேடும் வாய்ப்பாக பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.

பொறுப்பில்லாத தரப்புகள் பரப்பும் உணர்ச்சி தூண்டல்கள், பழிச் சுமத்தல்களால்  மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

எனவே எந்த தகவலையும் ஏற்கும் முன், அதற்கு எதிர்வினை அளிக்கும் முன் பொதுமக்கள் மேலும் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பேராக் மாநில போலிஸ் படையுடன் இணைந்து நடைபெற்ற மடானி முன்னணி பணியாளர்கள் பாராட்டு விழா, 'Singgah Sahur' நிகழ்வைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பிறகு அவர் இதனை தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset