நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பூர்வக்குடி மக்களுக்கு ரமலான் உதவிகள் வழங்கப்பட்டது: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

நோன்பில் இருக்கும் பூர்வக்குடி மக்களுக்கு ரமலான் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது.

சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

மான்டினில் உள்ள கம்போங் கெடாட்டில் உள்ள பூர்வக்குடி மக்களை சந்திக்க சென்றிருந்தேன்.

வரவிருக்கும் ஹரி ராயா கொண்டாட்டத்துடன் இணைந்து உணவுக் கூடைகள் அவர்களூக்கு வழங்கப்பட்டது.

மேலும் அவர்களுடன் பழகுவதில் எனக்கு நேரம் கிடைத்தது. இந்த உதவிகள் வரவிருக்கும் ஹரி ராயாவுடன் இணைந்து நன்றியுணர்வின் அடையாளம் என்று கூறினேன்.

அவர்களுக்கு உதவ முடிந்ததற்கு நான் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். என்னுடன் வந்த சிரம்பான் பெர்சத்து பிரிவு குழுவிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset