செய்திகள் மலேசியா
திரிசூலத்தை மிதித்த தமிம் டஹாரி மீது போலிஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: நடேசன்
அம்பாங் ஜெயா:
திரிசூலத்தை மிதித்த தமிம் டஹாரி மீது போலிஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று அறம் இயக்கத்தின் தலைவர் நடேசன் கேள்வி எழுப்பினார்.
நாட்டின் இனவாதத்தை தூண்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இப்போது ஆலயத்தை உடைக்கிறோம் என்று ஒரு சிலர் தொடர்ச்சியாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக தமிம் டஹாரி என்ற ஆடவர் இந்துக்கள் புனிதமாக வணங்கி வரும் திரிசூலத்தை மிதித்துள்ளார்.
அவரின் இந்த செயல் ஒட்டுமொத்த இந்துக்களையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதன் அடிப்படையில் தமிம் டஹாரி மீது நாடு முழுவதும் போலிஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.
அறம் இயக்கத்தின் சார்பில் அம்பாங் ஜெயா போலிஸ் தலைமையத்தில் புகார் செய்யப்பட்டது.
இருந்தாலும் அவ்வாடவர் மீது போலிசார் இன்னும் நடவடிக்கை எடுக்காதது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
இவ்விவகாரத்தில் அரசாங்கமும் போலிசாரும் இனி அமைதியாக இருக்க முடியாது.
நாட்டில் இனவாதத்தை தூண்டும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நடேசன் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 1:36 pm
பூர்வக்குடி மக்களுக்கு ரமலான் உதவிகள் வழங்கப்பட்டது: டத்தோ சரவணக்குமார்
March 11, 2026, 1:35 pm
ஒரு தரப்பினரை மட்டும் தண்டிக்காதீர்கள்: அக்மால்
March 11, 2026, 1:03 pm
காதலியைத் தாக்கிய லாரி ஓட்டுநர்
March 11, 2026, 1:02 pm
இனம், மத உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்: பொதுமக்களுக்கு அறிவுரை
March 11, 2026, 12:59 pm
“செக்கு சந்திரா மீதான தாக்குதலில் துப்புகள் கிடைத்துள்ளது”: டத்தோ ஷாசெலி கஹாரின் விளக்கம்
March 11, 2026, 12:58 pm
மகனைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தாய் நீதிமன்றத்தில் ஆஜர்
March 11, 2026, 12:57 pm
