செய்திகள் தமிழ் தொடர்புகள்
கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் யாராலும் தொட முடியாது: விஜய்
தஞ்சாவூர்:
கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் யாராலும் தொட முடியாது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.
அவர் பேசியதாவது:
வேலூர் கூட்டத்தில் தமிழ்நாடுதான் விஜய், விஜய்தான் தமிழ்நாடு என்று நான் ஏன் கூறினேன் என்றால், உண்மையான பிரதிநிதி நாம் என்பதற்குதான் அப்படி கூறியிருந்தேன். விஜய் vs ஸ்டாலின் எனக் கூறியிருந்தேன், தமிழ்நாடு பேரவைத் தேர்தலுக்கு தில்லியை பற்றி ஏன் பேச வேண்டும் என்று கேட்டிருந்தேன், உடனே பாஜகவுக்காக விஜய் பேசுகிறார் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
சென்னையில் தில்லி தில்லி எனக் கூறுகிறார்கள், ரைடு வந்தால் தில்லிக்கு வெள்ளை கொடி பிடிக்கிறார்கள். தமிழ்நாட்டை காப்பாற்றுவது பிழைக்க வைப்பது எல்லாம் திமுக, ஸ்டாலின்தான் என்பதெல்லாம் வேலை செய்யாது. சின்ன குழந்தைகள் எல்லாம் கூற ஆரம்பித்துவிட்டார்கள், ’ஓம் சக்தி திமுக ஒரு தீய சக்தி’ என்று. கிரிக்கெட்டில்கூட தமிழ்நாட்டு அணியை தில்லி தொட்டுக்கூட பார்க்க முடியாது. கிரிக்கெட்டில் விசில் போடுவது சிஎஸ்கே, தேர்தலில் விசில் போடப் போவது தவெக. அனைத்து அணிகளையும் தவெக அடித்து நொறுக்கும்.
எனக்கும் என்னுடைய மக்களுக்கும் நடுவில் யாராலும் நுழைய முடியாது. அம்மா பையன், அப்பா பையன், அண்ணன் தங்கை, அக்கா தம்பி உறவு. இது ஆழமான உறவு என்பதை தமிழக மக்கள் உணர்ந்திருப்பார்கள். மற்றவர்கள் இது தேர்தல், ஆனால் எனக்கும் என்னை நேசிக்கும் மக்களுக்கு இது எமோஷன்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2026, 9:29 am
வட இந்தியா சுற்றுலா சென்ற திருச்சியைச் சேர்ந்த ஐவர் படகு விபத்தில் சிக்கி மரணம்
April 30, 2026, 11:58 pm
தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் செல்ல வேண்டாம்: தவெக வேட்பாளர்களுக்கு விஜய் கட்டளை
April 30, 2026, 4:08 pm
கருத்துக் கணிப்புக்கு பிறகு முதல்வர் ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு
April 29, 2026, 9:32 pm
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்: திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு
April 29, 2026, 1:54 pm
பாவேந்தர் பாரதிதாசனின் 136-ஆவது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
April 28, 2026, 3:44 pm
