செய்திகள் தமிழ் தொடர்புகள்
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்: திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு
சென்னை:
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 118 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறக்கூடும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இரண்டாம் இடத்தில் அதிமுக கூட்டணியும், மூன்றாம் இடத்தில் தவெகவும் இடம்பெறும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
‘பீப்பிள்ஸ் பல்ஸ்’ (Peoples Pulse) வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புப்படி திமுக 125 தொகுதிகள் முதல் 145 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணி 65 முதல் 80 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தவெக 18-24 தொகுதிகளிலும், மற்றவர்கள் 2-6 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்’ (chanakya strategies) வெளியிட்டுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி திமுக 145-160 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 50-65 தொகுதிகளிலும், தவெக 13-18 தொகுதிகளிலும், மற்றவர்கள் 5-8 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘மேட்ரிஸ்’ (Matrize) வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, திமுக 122 -132 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 87-100 தொகுதிகளிலும், தவெக 10-12 தொகுதிகளிலும், மற்றவர்கள் 0-6 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
June 30, 2026, 11:56 am
