செய்திகள் தமிழ் தொடர்புகள்
கருத்துக் கணிப்புக்கு பிறகு முதல்வர் ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு
சென்னை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23 ஆம் தேதி முடிவடைந்து மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், புதன்கிழமை வெளியான தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான வாக்குக் கணிப்பில் திமுக கூட்டணி ஆட்சி தொடர வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக வேட்பாளர்கள் வியாழக்கிழமை சந்தித்தனர்.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று (ஏப் 30), சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், பொதுச் செயலாளர் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ. வேலு, கே.ஆர். பெரியகருப்பன், சு. முத்துசாமி, சி.வீ. மெய்யநாதன், சி.வி. கணேசன், செந்தில்பாலாஜி, கழக துணை அமைப்புச் செயலாளர் எஸ். ஆஸ்டின், டி.ஜெ. கோவிந்தராஜன், சபா. ராஜேந்திரன், நாமக்கல் ராணி, காதர்பாட்சா முத்துராமலிங்கம், கே.எஸ். மூர்த்தி, ரெ. மகேஷ், ஆ. தமிழரசி, எஸ்.ஏ. சத்யா, மு.மணிகண்டன், புதுச்சேரி ஆர். சிவா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
கடந்த 74 ஆண்டு கால தமிழக தோ்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத சாதனையாக இந்த வாக்குப் பதிவு அமைந்தது. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆா்) பிறகு நடைபெற்ற முதல் தோ்தல் இது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக பெரும்பாலான வாக்குக் கனிப்புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
June 30, 2026, 11:56 am
