செய்திகள் தமிழ் தொடர்புகள்
மதுரை கயல்விழியைக் கரம்பிடித்த கைலாய மாப்பிள்ளை
மதுரை:
தமிழரின் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் புகழ்பெற்ற தூங்காநகரமான மதுரையில் சித்திரை திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் கடந்த ஏப்ரல் 19 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை திருவிழாவால் மதுரையே திருவிழாக் கோலத்துடன் கலைக்கட்டியுள்ளது.
தொடர்ந்து 16 நாட்கள் நடைபெறும் இப்பெருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தேரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை உள்ளூர் நேரப்படி 8.35 முதல் 8.59 மணிக்குள் மிகவும் கோலாகலமாக நடைப்பெற்றது.
இந்தத் தெய்விகத் திருமணத்தைக் காண லட்ச கணக்கான பக்தர்கள் திரண்டு கோவிலின் சுற்றுப்புறம் முழுவதும் பக்தி உணர்வால் நிரம்பி இருந்தது.
உலகின் முதல் பெண்ணரசியாக மதுரையில் செங்கோன் அரசாளும் அன்னை மீனாட்சியின் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட பொழுது ஏராளமான பெண்கள் தாலிச்சரடு மாற்றும் வைபவமும் நடைப்பெற்றது.
அதனை தொடர்ந்து, பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபா அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த சிறப்பு அன்னதானமும் விமரிசையாக நடந்தேறியது.
10 டன் வண்ணமிகு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட திருக்கல்யாண மேடையில் திருப்பரங்குன்றத்திலிருந்து முருகப் பெருமான் தெய்வானையுடனும் பெருமாளும் எழுந்தருளினர்.
அக்னியில் பிறந்த மீன் போன்ற விழியும் பவள மேனியும் உடையாள் மதுரையைக் காத்தருள்பவளாக மகுடம் சூடி தென் திசையிலிருந்து கைலாயம் வரை சென்று உலகை வென்று அண்ணன் பெருமாள் தாரை வார்த்து கொடுக்க இன்று சொக்கநாதரைக் கரம்பிடித்து எழுந்தருளி அருள்புரியும் தெய்வீக காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
June 30, 2026, 11:56 am
