செய்திகள் தமிழ் தொடர்புகள்
கிறிஸ்துவரான ஜோசப் விஜய் திருச்செந்தூரில் சாமி தரிசனம் எப்படி செய்யலாம்? வலதுசாரி ஹிந்துக்கள் கேள்வி
சென்னை:
கிறிஸ்துவரான ஜோசப் விஜய், திருச்செந்தூர் சுப்பிரயமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தது எப்படி? என வலதுசாரி ஹிந்துக்கள் எனும் பெயரில் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பலரது கேள்விகளுக்கு திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் ராமு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல் முறையாக திருச்செந்தூர் கோயிலில் நேற்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடல் நீரில் காலை நனைத்த அவர் பின் கோயிலுக்குச் சென்ற விஜய்க்கு, கோயில் சண்முக விலாச மண்டபத்தில் வைத்து அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதையும், வேலும் அளித்தனர்.
முக்கிய பிரமுகர்கள் வருகை பதிவேட்டில் இணை ஆணையர் ராமு முன்னிலையில் விஜய் கையெழுத்திட்டார்.
பொதுவாகவே இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கோயில்களில் தரிசனத்துக்கு வரும் இந்து மதத்தைச் சேராதவர்கள், கோயில் கொடி மரம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கோயிலின் வழிபாட்டு முறையை ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் 2024 ஆம் ஆண்டில் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, இந்து மத வழிமுறைகளை பின்பற்றுவதாகவும் எழுத்துப் பூர்வமாக தெரிவித்தால், அவர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று இணை ஆணையர் ராமு விளக்கமளித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
June 30, 2026, 11:56 am
