செய்திகள் தமிழ் தொடர்புகள்
விஜய்யின் ஆன்மிகப் பயணம்: திருசெந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கன்னிக்கும் நாகூருக்கும் பயணமாகிறார்
சென்னை:
சீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேளாங்கன்னி ஆலயத்திற்கும் நாகூர் தர்காவிற்கும் செல்ல திட்டமிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டது.
வருகின்ற மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும், ஏப்ரல் 29, புதன்கிழமை சீரடி சாய் பாபா கோவிலிலும் விஜய் சாமி தரிசனம் செய்தார்.
இந்த நிலையில், நேற்று சீரடிக்கு தனி விமானம் மூலம் சென்ற விஜய்யுடன் தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தயாரிப்பாளர் ஜெகதீஷ், விஜய் கார் ஓட்டுநர் ராஜேந்திரன், பாதுகாவலர் நயீம், தொழிலதிபர் விஷ்ணு ரெட்டி ஆகியோருடன் அவரது மனைவி நேத்ரா ரெட்டி மகள் நேஹா ரெட்டியும் பயணித்தனர்.
தொழிலதிபர் விஷ்ணு ரெட்டி, விஜய்யின் மிக நெருங்கிய நண்பர் என்றும், விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் அவருக்கு பக்கபலமாக இருப்பவர் என்றும் தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மே 2, சனிக்கிழமை வேளாங்கண்ணி பேராலயத்துக்கும், நாகூர் தர்காவுக்கும் விஜய் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 12:05 pm
தமிழக மருத்துவமனைகளில் வாட்ஸ் ஆப் மூலம் புறநோயாளிகள் சீட்டு பதிவு அறிமுகம்
July 7, 2026, 3:53 pm
அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின் வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ
July 6, 2026, 4:48 pm
சென்னையில் விமானப்படை ஹெலிகாப்டர் இயந்திரக் கோளாறால் அவசரமாக தரையிறக்கம்
July 5, 2026, 7:47 pm
தமிழகத்தில் ஜூலை 11 வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
July 1, 2026, 11:10 pm
அனைத்து இடங்களிலும் ஊழல் வேரூன்றி உள்ளது: உயர் நீதிமன்றம் வேதனை
June 30, 2026, 4:05 pm
சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளரும் கவிஞருமான புவியரசு காலமானார்
June 30, 2026, 11:56 am
