நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

"ஈரான் போர் குறைந்தது 4 வாரங்கள் நீடிக்கும்": அமெரிக்க அதிபர் டிரம்ப் கணிப்பு

வாஷிங்டன்:

ஈரானுடன் போர் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரான் பெரிய நாடு என்பதால் குறைந்தது நான்கு வாரமாவது போர் நீடிக்கும் என்று அவர் கூறியதாய் Daily Mail நாளேடு தெரிவித்தது.

ஈரானியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றும் அவர் கூறினார். ஆனால் எப்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பதை அவர் கூறவில்லை.

இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து நடத்திய ராணுவ நடவடிக்கைகள் இரண்டாவது நாளாக தீவிரமடைந்தன.

ஈரான் தலைநகர் தெஹ்ரான் (Tehran) உள்ளிட்ட பல நகரங்களில் இடைவிடாமல் வெடிகுண்டுகள் வீசப்பட்டன.

எத்தனை பேர் மாண்டனர் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

அதே நேரத்தில் டெல் அவிவ் நோக்கி ஈரான் நேற்று இரவு தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தியது என்று அல்ஜசீரா ஊடகம் தெரிவித்தது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset