செய்திகள் உலகம்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது
காபூல்:
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லைப் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பாகிஸ்தான் விமானப்படை, காபூல் உள்ளிட்ட ஆப்கானிஸ்தானின் பல நகரங்களில் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், பாகிஸ்தானின் பொறுமை முடிவடைந்துவிட்டதாகக் கூறி, ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் நிர்வாகத்திற்கு எதிராக ‘திறந்த போர்’ தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.50 மணியளவில் காபூலில் முதல் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேலும் ஒரு தாக்குதல் நிகழ்ந்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் விமான எதிர்ப்பு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசு வட்டாரங்கள், காபூல் தாக்குதலை உறுதிப்படுத்தியதுடன், பாகிஸ்தான் போர் விமானங்கள் தென் ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹார், பாக்டியா பகுதிகளில் உள்ள இராணுவ தளங்களையும் தாக்கியதாக தெரிவித்தன.
பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் கூறுகையில், இந்தத் தாக்குதலில் 133 தாலிபான் போராளிகள் உயிரிழந்ததாகவும், ஒன்பது தாலிபான் நிலைகள் கைப்பற்றப்பட்டு, மேலும் 27 நிலைகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 27, 2026, 3:14 pm
இஸ்ரேல் ராணுவ பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயமடைந்தனர்
February 27, 2026, 1:16 pm
தாய்லாந்து தேர்தலில் சர்ச்சை: தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சி குற்றவியல் புகார்
February 27, 2026, 11:14 am
பிரேசில் தென்கிழக்கில் நிலச்சரிவால் 55 பேர் பலி
February 26, 2026, 5:31 pm
இரு ரஷ்ய பெண்களுடன் தொடர்பு இருந்ததாக பில் கேட்ஸ் ஒப்புதல்: எப்ஸ்டீன் குற்றங்களில் தொடர்பில்லை என மறுப்பு
February 26, 2026, 5:01 pm
ஜப்பானில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது: மக்கள் தொகை நெருக்கடி தீவிரம்
February 26, 2026, 4:32 pm
செயற்கைக்கோள் படங்கள் ஈரானின் போருக்கான தயாரிப்புகளை வெளிப்படுத்துகின்றன
February 26, 2026, 3:57 pm
பாகிஸ்தானில் இரு நாட்களில் 19 பேர் பலி: ஆயுதத் தாக்குதல்கள் தீவிரம்
February 26, 2026, 3:49 pm
