செய்திகள் உலகம்
தாய்லாந்து தேர்தலில் சர்ச்சை: தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சி குற்றவியல் புகார்
பாங்காக்:
தாய்லாந்தின் சமீபத்திய பொதுத் தேர்தலில், இரண்டாம் இடம் பெற்ற சீர்திருத்த நோக்குடைய மக்கள் கட்சி, தாய்லாந்து நாட்டின் தேசிய தேர்தல் ஆணையம் மீது குற்றவியல் புகார் மனுவை தாக்கல் செய்துள்ளது.
தேர்தல் நடைமுறைகள் ஒழுங்கற்றதாகவும், 12-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், தேர்தல் சட்டம் மீறப்பட்டதாகவும் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
கட்சியின் துணைத் தலைவர் வயோ அசாவருங்ருவாங் கூறுகையில், ஏழு தேர்தல் ஆணையர்களும், அதன் செயலாளர் நாயகனும், மேலும் ஒரு அதிகாரியும் எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த வழக்கில் மூன்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் இரண்டும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்புடையவை என்றும், மற்றொன்று வாக்குச்சீட்டுகளில் பயன்படுத்தப்பட்ட குறியீடுகள் வாக்காளர்களின் ரகசியத்தை பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை, தேர்தல் ஆணையம் கடந்த நாள், தற்காலிக பிரதமர் அனுதின் சார்ன்விரகுல் தலைமையிலான பூம்ஜைதாயை கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தியதை அடுத்து மேற்கொள்ளப்பட்டது. அந்தக் கட்சி 170 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்தது. மக்கள் கட்சி 88 இடங்களுடன் இரண்டாம் இடம் பெற்றது.
வாக்குச்சீட்டுகளில் இடம் பெற்ற குறியீடுகள் வாக்காளர்களை அடையாளம் காண பயன்படலாம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தேர்தல் ஆணையம் அதை மறுத்து, தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மட்டுமே அவை பயன்படுத்தப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.
வழக்கு தொடரப்பட்டால், தொடர்புடைய ஒன்பது பேருக்கும் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆண்டுகள் அரசியல் உரிமை இழப்பையும் சந்திக்க நேரிடும்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 27, 2026, 3:14 pm
இஸ்ரேல் ராணுவ பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயமடைந்தனர்
February 27, 2026, 2:39 pm
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது
February 27, 2026, 11:14 am
பிரேசில் தென்கிழக்கில் நிலச்சரிவால் 55 பேர் பலி
February 26, 2026, 5:31 pm
இரு ரஷ்ய பெண்களுடன் தொடர்பு இருந்ததாக பில் கேட்ஸ் ஒப்புதல்: எப்ஸ்டீன் குற்றங்களில் தொடர்பில்லை என மறுப்பு
February 26, 2026, 5:01 pm
ஜப்பானில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது: மக்கள் தொகை நெருக்கடி தீவிரம்
February 26, 2026, 4:32 pm
செயற்கைக்கோள் படங்கள் ஈரானின் போருக்கான தயாரிப்புகளை வெளிப்படுத்துகின்றன
February 26, 2026, 3:57 pm
பாகிஸ்தானில் இரு நாட்களில் 19 பேர் பலி: ஆயுதத் தாக்குதல்கள் தீவிரம்
February 26, 2026, 3:49 pm
