நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தானில் இரு நாட்களில் 19 பேர் பலி: ஆயுதத் தாக்குதல்கள் தீவிரம்

பெஷாவர்: 

வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் ஆயுதக் குழுக்கள் நடத்திய தொடர் தாக்குதல்களில் 15 காவல்துறையினர், நான்கு பொதுமக்கள் உயிரிழந்ததாக காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பவங்கள் கைபர் பக்துன்க்வா நகரத்தின் பல இடங்களில் பதிவாகியுள்ளன.

மேலும், இரண்டு காவல்துறையினர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த தாக்குதல்களுக்கு தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் பொறுப்பேற்றுள்ளது. 2021-ஆம் ஆண்டு காபூலில் தாலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்தக் குழுவின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட நான்கு தனித்தனி நடவடிக்கைகளில் 26 ஆயுதக்குழு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset