செய்திகள் உலகம்
அவதூறுச் செய்திக்கு இழப்பீடு கோர நீதிமன்றத்திற்குச் சென்ற சிங்கப்பூர் அமைச்சர்கள் கா சண்முகம், டான் சீ லெங்
சிங்கப்பூர்:
இணையத்தில் வெளிவந்த அவதூறுச் செய்திக்கு இழப்பீடு கோர உள்துறை அமைச்சர் கா சண்முகமும் மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும் இன்று நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளனர்.
The Online Citizen என்ற இணையப்பக்கத்தில் செய்தி வெளியானது. செய்தித்தளத்தின் முதன்மை ஆசிரியர் டெரி ஷுவுக்கு (Terry Xu) எதிராக வழக்கு தொடரப்பட்டது. அவர் அவதூறு பரப்பியதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தீர்ப்பு விதிக்கப்பட்டது.
தற்போது தைவானில் வசிக்கும் ஷு இன்று நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை.
Bloomberg செய்தித்தளத்தில் வெளிவந்த தகவல்களைத் தழுவி The Online Citizen இணையத்தளத்தில் செய்தி வெளியானது. உயர்தர பங்களா (Good Class Bungalow) பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அமைச்சர் கா சண்முகம் தமது உயர்தர பங்களாவை விற்றது குறித்தும் அமைச்சர் டான் ஒரு பங்களாவை வாங்கியது குறித்தும் செய்தியில் விவரிக்கப்பட்டிருந்தது. ஷு அந்தப் பத்திகளை நீக்க மறுத்துவிட்டார். அமைச்சர்கள் எவ்வளவு இழப்பீடு கோரினர் என்ற தகவல் வெளிவரவில்லை. வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. விவகாரம் தொடர்பில் Bloomberg நிறுவனம் மீதும் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த விசாரணை ஏப்ரலில் நடைபெறும்.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
February 26, 2026, 5:31 pm
இரு ரஷ்ய பெண்களுடன் தொடர்பு இருந்ததாக பில் கேட்ஸ் ஒப்புதல்: எப்ஸ்டீன் குற்றங்களில் தொடர்பில்லை என மறுப்பு
February 26, 2026, 5:01 pm
ஜப்பானில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது: மக்கள் தொகை நெருக்கடி தீவிரம்
February 26, 2026, 4:32 pm
செயற்கைக்கோள் படங்கள் ஈரானின் போருக்கான தயாரிப்புகளை வெளிப்படுத்துகின்றன
February 26, 2026, 3:57 pm
பாகிஸ்தானில் இரு நாட்களில் 19 பேர் பலி: ஆயுதத் தாக்குதல்கள் தீவிரம்
February 26, 2026, 12:58 pm
சில நாடுகளுக்கு அமெரிக்காவின் சுங்க வரி 15 சதவீதம் வரை உயர வாய்ப்பு
February 26, 2026, 11:20 am
கியூபா கரையோரத்தில் துப்பாக்கிச் சூடு: அமெரிக்க படகில் நால்வர் பலி
February 25, 2026, 5:35 pm
ரகசிய ஆயுத ஏற்றுமதியா? காசா போர் காலத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கியதாக இந்தியா மீது குற்றச்சாட்டு
February 25, 2026, 5:33 pm
ஈரானின் நீண்ட தூர ஏவுகணை திட்டம்: டிரம்ப் கடும் குற்றச்சாட்டு
February 25, 2026, 5:14 pm
