செய்திகள் உலகம்
இரு ரஷ்ய பெண்களுடன் தொடர்பு இருந்ததாக பில் கேட்ஸ் ஒப்புதல்: எப்ஸ்டீன் குற்றங்களில் தொடர்பில்லை என மறுப்பு
வாஷிங்டன்:
பில் கேட்ஸ், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் பழகியது ஒரு பெரிய தவறு என்று ஒப்புக்கொண்டதுடன், இரண்டு ரஷ்ய பெண்களுடன் தனிப்பட்ட உறவு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், எப்ஸ்டீன் தொடர்பான எந்தக் குற்றச்செயலிலும் தாம் ஈடுபடவில்லை என்று அவர் மறுத்துள்ளார்.
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஆவணங்களில் இடம்பெற்ற முக்கிய நபர்களில் ஒருவராக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவுநரான கேட்ஸ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆவணங்களில் எப்ஸ்டீனுடன் இருந்த நெருங்கிய நட்பு, நிதி தொடர்பான சட்டவிரோத நடவடிக்கைகள், தனிப்பட்ட புகைப்படங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
செவ்வாயன்று கேட்ஸ் அறக்கட்டளை ஊழியர்களுடனான டவுன் ஹாலில், 70 வயதான கேட்ஸ், எப்ஸ்டீனுடனான உறவு தனது நிறுவனத்தின் பணிகளைப் பாதித்ததாக ஒப்புக்கொண்டார்.
"எப்ஸ்டீனுடன் நேரத்தைச் செலவழித்து, கேட்ஸ் அறக்கட்டளை நிர்வாகிகளை எப்ஸ்டீனுடனான சந்திப்புகளுக்கு அழைத்து வந்தது ஒரு பெரிய தவறு," என்று அவர் கூறினார்.
மேலும், அந்த சர்ச்சைக்குரிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டபடி, இரண்டு ரஷ்ய பெண்களுடன் தனிப்பட்ட உறவு இருந்ததாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
“நான் எந்த சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை. சட்டவிரோதமான எதையும் நான் பார்க்கவில்லை,” என்று கூறி, எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுடன் தமக்கு தொடர்பில்லை என்றும் விளக்கினார்.
எப்ஸ்டீனுடன் நட்பு 2011-ல் தொடங்கியது. 2013-ல் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் எப்ஸ்டீன் குறித்து கவலை தெரிவித்திருந்தாலும், அவர் குறைந்தது இன்னும் ஒரு வருடம் அந்த உறவைத் தொடர்ந்ததாக கூறினார்.
“இப்போது எனக்குத் தெரிந்த விஷயங்களை நினைத்தால், அது நூறு மடங்கு மோசமானதாகத் தோன்றுகிறது. அவரது முந்தைய குற்றங்கள் மட்டுமல்ல, தொடர்ந்து தவறான நடத்தையும் இருந்தது என்பது இப்போது தெளிவாகியுள்ளது,” என்று கேட்ஸ் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 26, 2026, 5:01 pm
ஜப்பானில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது: மக்கள் தொகை நெருக்கடி தீவிரம்
February 26, 2026, 4:32 pm
செயற்கைக்கோள் படங்கள் ஈரானின் போருக்கான தயாரிப்புகளை வெளிப்படுத்துகின்றன
February 26, 2026, 3:57 pm
பாகிஸ்தானில் இரு நாட்களில் 19 பேர் பலி: ஆயுதத் தாக்குதல்கள் தீவிரம்
February 26, 2026, 3:49 pm
அவதூறுச் செய்திக்கு இழப்பீடு கோர நீதிமன்றத்திற்குச் சென்ற சிங்கப்பூர் அமைச்சர்கள் கா சண்முகம், டான் சீ லெங்
February 26, 2026, 12:58 pm
சில நாடுகளுக்கு அமெரிக்காவின் சுங்க வரி 15 சதவீதம் வரை உயர வாய்ப்பு
February 26, 2026, 11:20 am
கியூபா கரையோரத்தில் துப்பாக்கிச் சூடு: அமெரிக்க படகில் நால்வர் பலி
February 25, 2026, 5:35 pm
ரகசிய ஆயுத ஏற்றுமதியா? காசா போர் காலத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கியதாக இந்தியா மீது குற்றச்சாட்டு
February 25, 2026, 5:33 pm
ஈரானின் நீண்ட தூர ஏவுகணை திட்டம்: டிரம்ப் கடும் குற்றச்சாட்டு
February 25, 2026, 5:14 pm
