செய்திகள் உலகம்
கியூபா கரையோரத்தில் துப்பாக்கிச் சூடு: அமெரிக்க படகில் நால்வர் பலி
வாஷிங்டன்:
கியூபா கரையோர காவல்படை, அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட அதிவேக படகை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அமெரிக்கா–கியூபா இடையிலான உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புளோரிடாவில் பதிவு செய்யப்பட்ட அந்தப் படகில் பயணித்தவர்கள், அமெரிக்க தடைகளுக்குள் இருக்கும் கியூபா தீவை ஏன் அணுகினர் என்பதைக் ஹவானா இதுவரை வெளியிடவில்லை.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தை வாஷிங்டன் தீவிரமாக விசாரித்து வருவதாகவும், முழு தகவல்கள் கிடைத்த பிறகு உரிய பதில் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கியூபாவிலிருந்து சுமார் 160 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புளோரிடா மாநிலத்தின் சட்டத்துறைத் தலைவர், இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், ஆறு பேர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், அந்தப் படகின் பின்னணி குறித்து விவரம் வெளியிடப்படவில்லை.
முன்னதாகவும், அமெரிக்காவிலிருந்து கியூபா கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழையும் அதிவேக படகுகள் குறித்து கியூபா அரசு தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 26, 2026, 5:31 pm
இரு ரஷ்ய பெண்களுடன் தொடர்பு இருந்ததாக பில் கேட்ஸ் ஒப்புதல்: எப்ஸ்டீன் குற்றங்களில் தொடர்பில்லை என மறுப்பு
February 26, 2026, 5:01 pm
ஜப்பானில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது: மக்கள் தொகை நெருக்கடி தீவிரம்
February 26, 2026, 4:32 pm
செயற்கைக்கோள் படங்கள் ஈரானின் போருக்கான தயாரிப்புகளை வெளிப்படுத்துகின்றன
February 26, 2026, 3:57 pm
பாகிஸ்தானில் இரு நாட்களில் 19 பேர் பலி: ஆயுதத் தாக்குதல்கள் தீவிரம்
February 26, 2026, 3:49 pm
அவதூறுச் செய்திக்கு இழப்பீடு கோர நீதிமன்றத்திற்குச் சென்ற சிங்கப்பூர் அமைச்சர்கள் கா சண்முகம், டான் சீ லெங்
February 26, 2026, 12:58 pm
சில நாடுகளுக்கு அமெரிக்காவின் சுங்க வரி 15 சதவீதம் வரை உயர வாய்ப்பு
February 25, 2026, 5:35 pm
ரகசிய ஆயுத ஏற்றுமதியா? காசா போர் காலத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கியதாக இந்தியா மீது குற்றச்சாட்டு
February 25, 2026, 5:33 pm
ஈரானின் நீண்ட தூர ஏவுகணை திட்டம்: டிரம்ப் கடும் குற்றச்சாட்டு
February 25, 2026, 5:14 pm
