செய்திகள் உலகம்
உலகின் மிக உயரமான 'பாழ்' கட்டிடத்திற்கு விடிவுகாலம்
பெய்ஜிங்:
சீனாவில் உள்ள கோல்டின் ஃபைனான்ஸ் 117 வானளாவிக் கட்டிடத்தின் இறுதிக்கட்ட பணிகள் நீண்ட காலமாகத் தாமதமாகி வந்த நிலையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு வருவதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தியான்ஜினில் அமைந்துள்ள இந்தக் கோபுரம், உலகின் மிக உயரமான ஆள் இல்லாத கட்டிடம் என்ற சாதனையை கின்னஸ் உலக சாதனைகளில் படைத்துள்ளதாக நியூஸ்வீக் இதழ் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் இறுதியில், கட்டிடத்தின் உச்சியில் 7.6 டன் எடையுள்ள வைர வடிவ மகுடக் கட்டமைப்பைத் தொழிலாளர்கள் நிறுவத் தொடங்கியதாகத் தெரிகிறது.
ஏப்ரல் 2025 இல் அந்தத் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து, அந்த எஃகுக் கட்டமைப்பை நிறுவுவது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.
பிரதான கோபுரத்தின் குத்தகை விவகாரம் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், ஏழு அரசு உரிமையுள்ள நிறுவனங்களும் 10 தனியார் நிறுவனங்கள் உட்பட 17 நிறுவனங்கள் பங்கேற்பதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
இது சீன 117 கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இது 300 மீட்டர்களை (984 அடி) மீறும் கட்டிடங்களான 'சூப்பர்டால்' வானளாவிகளின் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.
128 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தின் கட்டுமானம் ஆகஸ்ட் 18, 2008 அன்று தொடங்கியது. வேகமான காற்று, நில அதிர்வு நடவடிக்கைகளிலிருந்து கட்டமைப்பு நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக 'மெகா நெடுவரிசை' அமைப்பு, சிக்கலான டிரஸ்ஸ்களைப் பயன்படுத்தி, இது ஒரு அசாதாரண பொறியியல் சாதனையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கோபுரம் செப்டம்பர் 2015 இல் 596 மீட்டர் (1,955 அடி) உயரத்தை எட்டியது. அந்த நேரத்தில், இது உலகின் ஐந்தாவது உயரமான கட்டிடமாக அமைந்தது.
இருப்பினும், அதே ஆண்டு டிசம்பரில், ஜூன் 2015 இல் சீனப் பங்குச் சந்தை நெருக்கடியைத் தொடர்ந்து, அதன் உரிமையாளரான ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட கோல்டின் புராபர்டிஸ் மேம்பாட்டாளர் நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டதால் கட்டுமானப் பணி தாமதப்படுத்தப்பட்டது.
பணி நிறைவில் தாமதத்தைச் சந்தித்த வானளாவிக் கட்டிடங்களில் கோல்டின் ஃபைனான்ஸ் 117 மட்டுமே விதி விலக்கல்ல.
உலகின் மிக உயரமான கட்டிடமாக மகுடம் சூடும் என எதிர்பார்க்கப்படும் சவூதி அரேபியாவின் ஜெட்டா கோபுரத்தின் கனவு 2018 ஆம் ஆண்டு அதன் கட்டுமானம் நிறுத்தப்பட்டதால் அது கனவாக மட்டுமே அமைந்தது. பின்னர், 2023 ஆம் ஆண்டு அது மீண்டும் தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 2028 இல் முடிவடையும்படியாக திட்டமிடப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 13, 2026, 3:04 pm
வங்காளதேசத்தில் பரபரப்பு: மத விவகாரத்தில் ஆன்மிகத் தலைவர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரம்
April 12, 2026, 6:08 pm
வங்கதேசத்தில் தட்டம்மை நோயால் 100 குழந்தைகள் பலியான சோகம்
April 12, 2026, 12:01 pm
ஈரான்-அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்தது: அமெரிக்கத் துணை அதிபரின் இறுதி எச்சரிக்கை
April 12, 2026, 11:17 am
