நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்து மக்களின் சுமையைக் குறைக்கப் புதிய திட்டம்: விவசாயிகளுக்கும் சிறு வணிகர்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் வசதி

பேங்காக்: 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கத்தைக் குறைக்கும் பொருட்டு, பொதுமக்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.

தாய்லாந்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சமூக நல அட்டை வைத்திருக்கும் சுமார் 1.3 கோடி மக்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.

அவர்களின் மாதாந்திர அத்தியாவசியச் செலவினங்களுக்கான தொகை 300 பாட் இருந்து 400 பாட்-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக விவசாயிகள், சிறு வணிகர்கள், விளிம்புநிலை (Marginal) மக்களைப் பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அந்நாட்டு நிதி அமைச்சர் எக்னிதி நிதிதன்பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகள், சிறு தொழில் முனைவோருக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கவும் அரசு முன்வந்துள்ளது. சுற்றுச்சூலலைப் பாதுகாக்கும் நோக்கில் மின்சார வாகனங்கள் வாங்குவதற்கும், சூரிய ஆற்றல் தகடுகளை (Solar Panels) நிறுவுவதற்கும் சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தாய்லாந்தின் பாரம்பரியப் பண்டிகையான 'சொங்க்ரான்' கொண்டாட்டத்தை முன்னிட்டு, போக்குவரத்துத் துறைக்கும் மானியங்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி, பொருட்களின் விலை உயர்வால் மக்கள் எதிர்காலத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க, இத்தகைய நீண்டகாலத் திட்டங்கள் அவசியமென நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

அரசின் இந்தத் துரித நடவடிக்கை தாய்லாந்து மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset