செய்திகள் உலகம்
சீன மீன்பிடி படகு பறிமுதல்: ஜப்பான் நடவடிக்கைக்கு சீனா கடும் அதிர்ச்சி
டோக்கியோ:
ஜப்பான் அதிகாரிகள் இன்று ஒரு சீன மீன்பிடி படகை பறிமுதல் செய்து, அதன் கேப்டனை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம், ஜப்பான், சீனா நாடுகளுக்கிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.
கடந்த நவம்பரில், சனே தகைச்சி, சீனா வலுக்கட்டாயமாக தைவானை கைப்பற்ற முயன்றால், ஜப்பான் இராணுவ ரீதியில் தலையிடலாம் எனக் கூறியிருந்தார். அந்த அறிக்கை, பெய்ஜிங் நிர்வாகத்தின் கடும் எதிர்ப்பை தூண்டியது.
இதற்கிடையில், ஜப்பான் மீன்வள முகமை வெளியிட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்ட படகின் கேப்டனுக்கு மீன்வள அதிகாரிகள் ஆய்வுக்காக நிற்குமாறு உத்தரவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், அந்த படகு உத்தரவை பின்பற்றாமல் தப்பிச் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதனைத் தொடர்ந்து, அதே நாளில் படகின் கேப்டன் கைது செய்யப்பட்டார்,” என அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 13, 2026, 1:19 pm
இஸ்தான்புலில் இரட்டை கொலை அதிர்ச்சி: விமான நிலையத்தில் இரு சந்தேகநபர்கள் கைதாகினர்
February 13, 2026, 12:28 pm
காதல் முறிவின் கோபம்: தீ வைத்து கொளுத்திய முன்னாள் மனைவியின் வீடு
February 12, 2026, 9:06 pm
சூடானில் 30 பயணிகளுடன் சென்ற படகு கவிழ்ந்ததில் 21 பேர் பலியாகினர்
February 12, 2026, 3:25 pm
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் மீண்டும் ஒரு மலேசியர் தூக்கிலிடப்பட்டுள்ளார்
February 12, 2026, 2:41 pm
வைரல் வீடியோவிற்காக நஞ்சு நண்டைச் சாப்பிட்ட பிலிப்பைன்ஸ் பெண் சமூக ஊடகர் பலி
February 12, 2026, 11:04 am
கெசானி சூறாவளி கொடூரம்: மடகாஸ்கரில் 2.5 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
February 11, 2026, 12:22 pm
பள்ளி, வீட்டை இலக்காகக் கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி
February 11, 2026, 11:39 am
காசாவுக்கு 8,000 வீரர்களை அனுப்பத் தயார்: இந்தோனேசியாவின் அதிபர் அறிவிப்பு
February 10, 2026, 3:38 pm
