நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் வெற்றி பெற்றனர்.

அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் லிவர்பூல் அணியை சந்தித்து விளையாடினர்.

இத சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை பெர்னாண்டோ சில்வா, எர்லிங் ஹாலண்ட் ஆகியோர் அடித்தனர்.

சொந்த அரங்கில் களமிறங்கிய லிவர்பூல் அணியினர் இவ்வாட்டத்தில் தோல்வி கண்டது அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

மற்றொரு ஆட்டத்தில் கிறிஸ்டல் பேலஸ் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset