செய்திகள் விளையாட்டு
மலேசிய ஜாம்பவான்களுடனான ஆட்டம்; எம்ஆர்எம் கால்பந்து அணிக்கு மிகப் பெரிய அனுபவத்தை பெற்று தந்தது: லத்திவ் - ஹஸ்மா
சிரம்பான்:
மலேசிய ஜாம்பவான்களுடனான ஆட்டம் எம்ஆர்எம் கால்பந்து அணிக்கு மிகப் பெரிய அனுபவத்தை பெற்று தந்தது.
எம்ஆர்எம் கிளப்பின் தலைவர் ஹஸ்மா, துணைத் தலைவர் லத்திவ் ஆகியோர் கூறினர்.
எம்ஆர்எம் கால்பந்து கிளப் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
இந்த 8 ஆண்டுகளில் கால்பந்து வளர்ச்சிக்காக பல நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
அனைத்துலக ரீதியில் பல போட்டிகளில் எம்ஆர்எம் அணி களமிறங்கியுள்ளனர்.
குறிப்பாக பல போட்டிகளில் எம்ஆர்எம் அணியினர் வெற்றி பெற்று சாதித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் தான் இன்று மலேசிய ஜாம்பவான் வீரர்களுடன் நட்புமுறை ஆட்டத்தில் எம்ஆர்எம் அணி பங்கேற்றது.
இவ்வேளையில் ஜாம்பவான் ஜைனல் ஆபிடினுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரின் ஒத்துழைப்பு ஆதரவுடன் தான் இன்றைய போட்டி நடைபெற்றது.
இவ்வாட்டத்தில் தோல்வி கண்டாலும் எம்ஆர்எம் கால்பந்து அணிக்கு இந்த ஆட்டம் பெறும் அனுபவத்தை பெற்று தந்தது என்று அவர்கள் கூறினார்.
எம்ஆர்எம் கால்பந்து கிளப்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக இளையோருக்கான கால்பந்து போட்டிகள், பயிற்சிகள் நடத்தப்படவுள்ளது.
மேலும் பெண்களுக்கான கால்பந்து போட்டிகளை நடத்துவதும் எங்களின் திட்டத்தில் உள்ளது என்று ஹஸ்மா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 8, 2026, 10:18 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
February 8, 2026, 10:02 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
February 6, 2026, 11:17 am
சவூதி புரோ லீக் நிர்வாகம் ரொனால்டோவை எச்சரித்துள்ளது
February 6, 2026, 11:12 am
கோபா டெல் ரெய் கிண்ணம்: அரையிறுதியில் அட்லாட்டிகோ மாட்ரிட்
February 5, 2026, 10:20 am
அல் நசர் கிளப்பை விட்டு வெளியேற ரொனால்டோ தயாராக உள்ளார்
February 5, 2026, 10:17 am
கராபாவ் கிண்ண இறுதியாட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் மோதல்
February 4, 2026, 8:49 am
கோபா டெல் ரெய் கிண்ணம்: பார்சிலோனா வெற்றி
February 4, 2026, 8:47 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: இறுதியாட்டத்தில் அர்செனல்
February 3, 2026, 10:04 am
