நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தஞ்சோங் செப்பாட்டில் இனி பன்றிகள் வளர்க்கப்படக் கூடாது: சிலாங்கூர் சுல்தான் உத்தரவு

ஷாஆலம்:

கோல லங்காட்டின் தஞ்சோங் செப்பாட் பகுதியில் இனி பன்றி வளர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது என்று சிலாங்கூர் சுல்தான் உத்தரவிட்டுள்ளார்.

எனவே, தற்போதுள்ள நடவடிக்கைகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு, பின்னர் முழுமையாக புக்கிட் தாகார் பகுதிக்கு மாற்றப்பட வேண்டும்.

ஒரு கட்டமைக்கப்பட்ட திட்டத்தின் படி தொடர்புடைய அனைவரும் சட்ட, ஒழுங்குமுறை தேவைகளுக்கும் இணங்க வேண்டும்.

சிலாங்கூர் மாநிலத்தின் உள்கட்டமைப்பு வேளாண்மை ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இர். இஷாம் ஹாஷிம், உள்ளாட்சி, சுற்றுலா ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இங் சூயி லிம் ஆகியோருடன் நடைபெற்ற கூட்ட அமர்வைத் தொடர்ந்து சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில் பன்றி வளர்ப்பு நடவடிக்கைகளின் மேலாண்மை, ழிகாட்டுதல் தொடர்பான விஷயங்களை சிலாங்கூர் சுல்தான் முழுமையாக ஆய்வு செய்துள்ளார்.

மக்களின் நலன்கள், சுற்றுச்சூழலின் நல்வாழ்வு மற்றும் மாநிலத்தின் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு என்று அலாம் ஷா அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக சிலாங்கூர் மாநிலத்தில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மட்டுமே பன்றி இறைச்சி தேவை.

தேவையின் புள்ளிவிவரங்கள், உண்மையான அளவை அடையாளம் காண செல்லுபடியாகும் தரவுகளின் அடிப்படையில் விரிவான ஆய்வு, விரிவான மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சுல்தான் உத்தரவிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset