நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து கட்சி துரோகி அல்ல: மொஹைதின்

கோலாலம்பூர்:

பெர்சத்து ஒரு போதும் துரோகி அல்ல என்று அதன் தலைவர் டான்ஶ்ரீ மொஹைதின் யாசின் கூறினார்.

பெர்சத்து கட்சியின் உச்சமன்றக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது.

தேசியக் கூட்டணியின் தலைவர் பொறுப்பில் இருந்து டான்ஶ்ரீ மொஹைதின் யாசின் விலகியதை இக்கூட்டம் முழுமையாக ஏற்றுக் கொண்டது.

ஆனால் பெர்சத்து கட்சி துரோகியாக மாறி விட்டது என்ற குற்றச்சாட்டை அக்குழு மறுத்தது.

நான்கு மணி நேரம் நீடித்த இக்கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய டான்ஶ்ரீ மொஹைதின் யாசின்,

பெர்லிஸ் பிரச்சினையில் பாஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமட் சுக்ரி ராம்லியை மந்திரி புசார் பதவியில் இருந்து நீக்குவதில் பெர்சத்து சிறிதும் ஈடுபடவில்லை.

மாறாக, பெர்சத்து முழுமையான அதிகாரம் கொண்ட பெர்லிஸ் ராஜா எடுத்த முடிவை மட்டுமே கடைப்பிடித்தது, அது மதிக்கப்பட வேண்டும்.

எனவே, பெர்லிஸில் பாஸ் நாசமாக்குவதில் பெர்சத்து எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset