நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தெற்கு தாய்லாந்திற்கான பயணத்தை ஒத்திவைக்குமாறு மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்

கோத்தா பாரு:

ஞாயிற்றுக்கிழமை கிளந்தான் எல்லைப் பகுதியில் தாய்லாந்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, தெற்கு தாய்லாந்திற்கான பயணத்தை ஒத்திவைக்குமாறு அங்கு வசிக்கும் மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நோக்கங்களுக்காக தனிநபர்கள் அங்கு பயணிப்பதை அதிகாரிகளால் தடுக்க முடியாது என்றும், ஆனால் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ முஹம்மத் யூசோப் மமட் கூறினார்.

“தேவையற்ற ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டாம் என்றும், அவசரத் தேவை இல்லாவிட்டால் தெற்கு தாய்லாந்திற்கான பயணத்தை ஒத்திவைக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

“தாய் பாதுகாப்பு அதிகாரிகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பு மூலம் முன்னேற்றங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்” என்று கிளந்தான் காவல் படை தலைமையகத்தில் சந்தித்தபோது அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

நாரதிவத், யாலா, பட்டானியின் மூன்று தெற்கு தாய் மாகாணங்களில் உள்ள பல பெட்ரோல் நிலையங்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்து விரிவான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்று முஹம்மத் யூசோப் கூறினார்.

எல்லையோரம் இருக்கும் மலேசியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset