நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நண்பரா, எதிரியா? ஊழலுக்கு எதிரான போரில் யாருக்கும் சலுகை இல்லை: பிரதமர் அன்வார்

புத்ராஜெயா: 

டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு, ஊழலை ஒழிப்பதில் எந்தவித தளர்வும் காட்டாது உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும், அரசியல் நண்பர்களோ அல்லது எதிரிகளோ யாரிடமிருந்தும் வரும் மிரட்டல்களை ஏற்றுக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் அழுத்தமாக கூறியுள்ளார்.

நாட்டின் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்றும், இதன் மூலம் மீட்கப்படும் அரசுப் பணம் மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

“நான் சமீபத்தில் மலேசிய மாமன்னரை சந்தித்தேன். அப்போது சமீப காலமாக, குறிப்பாக உயர் நிலைகளில் பரவி வரும் ஊழலை எதிர்த்து எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் குறித்து அவருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

“எனது அரசு எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காது. எந்த தரப்பிலிருந்தும் வரும் மிரட்டல்களை ஏற்கமாட்டோம். இந்தப் பிரச்சினையை நண்பராக இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் திடமாக எதிர்கொள்வோம் என்பதை நான் தெளிவாக எடுத்துரைத்தேன்,” என அவர் கூறினார்.

மடானி அரசு ஆரம்பத்திலிருந்தே நல்லாட்சியும் ஊழல் ஒழிப்பு நிர்வாகத்திலும் முக்கிய அடிப்படை கொள்கைகளை வைக்கப்பட்டுள்ளதாக அன்வார் கூறினார்.

இருப்பினும், இத்துறைகளில் இன்னும் சில பலவீனங்கள் உள்ளன என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

“பழுதடைந்த பழைய பண்பாட்டு கட்டமைப்புகளிலும் நடைமுறைகளிலும் சிக்கிய சில சுவடுகள் இன்னும் நம்மிடையே உள்ளன.

“அதனால்தான், சில நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன. அவை என் அலுவலகம் உட்பட நிர்வாகத்தில் உள்ளவர்கள், கூட்டணி அரசின் கட்சிகளைச் சேர்ந்த நண்பர்கள், ஆயுதப்படை இராணுவம், அரசுப் பணியாளர்களையும் உள்ளடக்கியவை,” என்று அவர் தெரிவித்தார்.

கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset