நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா மாநில மஹிமா கூட்டத்தில் இந்து சமயம் உட்பட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன: டத்தோ சிவக்குமார்

ஈப்போ:

பேரா மாநில மஹிமா கூட்டத்தில் இந்து சமயம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மஹிமாவின் தலைவத் டத்தோ ந. சிவக்குமார் இதனை கூறினார்.

ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டேன்.

மேலும் மஹிமாவின் நிரந்தரக் குழு உறுப்பினருமான சீதாராமன் ராதாகிருஷ்ணனுடன் முறையான கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இந்த சந்திப்பின் போது, ​​மத மரபுகளைப் பாதுகாப்பதிலும், இந்து சமூகத்தை மேலும் வலுப்படுத்துவதிலும் ஒற்றுமை, ஒத்துழைப்பு, கூட்டுப் பொறுப்பின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த மதிப்புகளை நிலைநிறுத்துவதில் சீதாராமன் ராதாகிருஷ்ணனின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, முயற்சிகளுக்கு எனது பாராட்டுகள் என டத்தோ சிவக்குமார் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset