நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் சாதனை இளைஞர்களை உருவாக்கும் மைஸ்கில் அறவாரியத்திற்கு பாராட்டுகள்: குலசேகரன்

களும்பாங்:

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் சாதனை இளைஞர்களை உருவாக்கும் மைஸ்கில் அறவாரியத்திற்கு பாராட்டுகள்.

பிரதமர் துறையின் (சட்டம், நிறுவன சீர்திருத்தம்) துணையமைச்சர் குலசேகரன் இதனை கூறினார்.

கடந்த 2018 முதல் மைஸ்கில் அறவாரியத்துடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளேன்.

மதிப்புகள் சார்ந்த கல்வி, தொழில் திறன்கள் மூலம் ஆபத்தில் உள்ள இளைஞர்களை மேம்படுத்துவதற்கான அதன் பணியை நான் பார்த்து வருகிறேன்.

உங்கள் பயணம் மலேசிய திவேட் பணியாளர்களின் எதிர்காலத்தின் வாக்குறுதியையும் பிரதிபலிக்கிறது.

பட்டதாரிகளுக்கு வயரிங், ஏர் கண்டிஷனிங், செயலக பயிற்சி, பேக்கரி & பேஸ்ட்ரி கலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப, தொழில்முறை துறைகளில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த திட்டங்கள்  பின்தங்கிய இளைஞர்களை தேசிய வேலை வாய்ப்பு,  பொருளாதார இலக்குகளுக்கு ஏற்ப திறன்களுடன் மேம்படுத்துவதற்கான மைஸ்கில் நோக்கத்தின் ஒரு பகுதியாகும்.

மேலும் பல பயிற்சி மையங்கள் அரசாங்கத்தின் உதவியுடன் செயல்பட்டு வருகின்றன.

ஆனால் மைஸ்கில் சொந்த மகிழ்ச்சியின் அடிப்படையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

பல தரப்பினரின் ஆதரவு அதன் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளது.

பல சிரமங்களை எதிர்கொண்டாலும் பின்தங்கிய மாணவர்களையும் வெற்றியாளர்களாக உருவாக்க வேண்டும் என மைஸ்கில் போராடுகிறது.

இவ்வேளையில் மைஸ்கில் அறவாரியத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குலசேகரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset