நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்களை தடுக்க  எம்சிஎம்சிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்: டாக்டர் ஃபௌசியா முஹம்மத் சாத்

கோலாலம்பூர்:

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கங்களை தடுக்க எம்சிஎம்சிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

எம்சிஎம்சி அதிகாரங்களை அவசரமாக வலுப்படுத்தி, அனைத்து இணைய தளங்களும் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உடனடியாகப் புகாரளிக்கவும் தடுக்கவும் வேண்டும்.

சமீபத்தில் அதிகாரிகள் அறிவித்த 880,000 பாலியல் கோப்புகள் அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்புகள் ஆகும்.

இதுவரை  31 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தகைய குற்றங்கள் இப்போது மிகப் பெரிய அளவிலும் ஒழுங்கமைக்கப்பட்ட அளவிலும் நடக்கிறது.

உப்சியின் ஆலோசனை உளவியலாளர்  துணைப் பேராசிரியர் டாக்டர் ஃபௌசியா முஹம்மத் சாத் இதனை கூறினார்.

ONSA இன் கீழ் தள இணக்கத்துடன், வயது வரம்புகளை நிர்ணயித்தல், வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துதல், குழந்தைகள் டிஜிட்டல் தீங்குக்கு ஆளாகும் அபாயத்தைக் குறைக்கலாம்.

இது மெட்டா போன்ற தளங்களின் உலகளாவிய நடைமுறைகளுடன் ஒத்துப்போகிறது.

தற்போது இளையோர் பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் முக்கியமாக மோசமான உள்ளடக்கத்திற்கான வடிப்பான்கள் மற்றும் தெரியாத கணக்குகளுடனான தொடர்புகளின் வரம்புகள் அடங்கும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset