நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மைஸ்கில் அறவாரியத்தின் 7ஆவது பட்டமளிப்பு விழா; 250 மாணவர்கள் பட்டம் பெற்றனர்: பசுபதி

களும்பாங்:

மைஸ்கில் அறவாரியத்தின் 7ஆவது பட்டமளிப்பு விழாவில் 250 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

மைஸ்கில் அறவாரியத்தின் தோற்றுநரும் இயக்குநருமான வழக்கறிஞர் பசுபதி இதனை கூறினார்.

திறன்கள், மதிப்புகள், இரண்டாவது வாய்ப்புகள் மூலம் மைஸ்கில்ஸ் அறவாரியம் பட்டதாரிகளை இன்று  கொண்டாடியது.

குறிப்பாக 7ஆவது பட்டமளிப்பு விழாவில் இன்று மைஸ்கில் அறவாரியம் இந்த முக்கிய மைல்கல்லைக் கொண்டாடியது.

இந்த நிகழ்வில், முழுமையான மாற்றம், தொழில்சார் திட்டங்களை வெற்றிகரமாக முடித்து, வேலை வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட உலகத்திற்கு அவர்களைத் தயார்படுத்திய 250 பட்டதாரிகள் கௌரவிக்கப்பட்டனர்.

பல்வேறு சூழ்நிலைகளை சேர்ந்தாலும் இம்மாணவர்கள் இன்று சாதனையாளர்களாக உள்ளனர்.

இதுவே மைஸ்கில் அறவாரியத்தின் சாதனை என்று பசுபதி கூறினார்.

மைஸ்கில் எப்போதும் பராமரிப்பு, வழிகாட்டுதல் வாய்ப்பு மூலம் மாற்றத்தின் சக்தியை நம்புகிறது.

எங்கள் மாணவர்களில் பலர் சமூகத்தில் தங்களின் இடம் குறித்து நிச்சயமற்றவர்களாக எங்கள் வீட்டு வாசலுக்கு வந்தனர்.

இன்று, அவர்கள் நம்பிக்கையான பங்களிப்பாளர்களாக, மதிப்புகள், திறன்கள்,  நோக்கத்துடன் பணி உலகத்தை எதிர்கொள்ளத் தயாராக வெளிநடப்பு செய்கிறார்கள்.

இந்த கொண்டாட்டம் நமது இளைஞர்களின் மீள்தன்மைக்கும், தங்கள் திறனை நம்பும் குடும்பங்கள், கல்வியாளர்கள், கூட்டாளர்களின் கூட்டு அர்ப்பணிப்புக்கும் ஒரு சான்றாகும்.

மைஸ்கில் அறவாரியம் குணநல மறுசீரமைப்ப, திறன் அடிப்படையிலான கல்வியில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது.

இது பாதிக்கப்படக்கூடிய இளைஞர்கள் வறுமை, சமூக விலக்கின் சுழற்சிகளை உடைக்க உதவுகிறது என்று மைஸ்கில் அறவாரியத்தின் இயக்குநர்கள் குழுவின் தலைவர் டாக்டர் சண்முக சிவா கூறினார்.

முன்னதாக பிரதமர் துறையின் (சட்டம், நிறுவன சீர்திருத்தம்) துணையமைச்சர் குலசேகரன் மாணவர்களுக்கு பட்டங்களை எழுத்து வழங்கினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset