நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய்லந்து - கம்போடியப் பூசல் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஆலோசனை

 

கோலாலம்பூர்: 

தாய்லந்து - கம்போடியப் பூசல் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம்  பேசியிருக்கிறார். 

இருநாட்டு எல்லையில் உள்ள சூழலை மதிப்பிட விரைவில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடத்தப்படும் என்றார் டத்தோஸ்ரீ அன்வார்.

பதற்றத்தைத் தணித்து, வட்டாரத்தில் அமைதியை நிலைநாட்ட ஆசியான் உதவும் என்று அன்வார் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லந்து - கம்போடியா இடையே முதலில் மலேசியா சமரசம் செய்து வைத்தது. அக்டோபர் மாதம் கோலாலம்பூரில் ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தின்போது அதிபர் டிரம்ப், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

இருதரப்பும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்துப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணும்படி பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset