நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணைய பாதுகாப்பு சட்டம் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்தும்: டாக்டர் சிவமுருகன்

கோலாலம்பூர்:

இணைய பாதுகாப்பு சட்டம் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

யூஎஸ்எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பேராசிரியர் டாக்டர் சிவமுருகன் இதனை தெரிவித்தார்.

சமீபத்தில் அதிகாரிகள் அறிவித்த 880,000 பாலியல் கோப்புகள் அதிர்ச்சியூட்டுவனவாக உள்ளன.

இது தொடர்பாக  31 கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆக 16 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கான சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் திட்டங்கள், இணைய பாதுகாப்புச் சட்டம் 2025 அமலாக்கத்துடன், மலேசியாவின் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கின்றன.

இந்த நடவடிக்கை மலேசியாவை தடுப்பு அணுகுமுறைக்கு மாற்றுகிறது.

மேலும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வயது குறைந்த பயனர்களைப் பாதுகாப்பதை செயல்பாட்டு நிபந்தனையாகக் கோருகிறது என்று அவர் கூறினார்.

இன்று குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான உள்ளடக்கம் பெரும்பாலும் சாதாரண பயனர்கள் பார்க்க முடியாத ஒன்றை மறைக்கப்பட்ட ஊடகங்களின் வழியாக பரவுகிறது.

இதில் மறைமுக இணைய குழுக்கள் மொழி அல்லது மாற்றப்பட்ட கோப்பு வடிவங்களைப் பயன்படுத்தி சட்டவிரோத உள்ளடக்கத்தை பரப்பி வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகளை கண்டறிவது அவ்வளவு எளிதன்று. இருப்பினும் அதை கண்காணிக்கப்பட வேண்டும். இதை கண்காணிக்கப்படாவிட்டால் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் வெகு வேகமாகவும் விரைவாகவும் பரவுகிறது.

ஆக இப்புதிய சட்டம்  ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குழந்தையும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளது. குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதால், ஆரம்பகால கண்டறிதல் மிகவும் முக்கியமானது.

சம்பந்தப்பட்ட உள்ளடக்கங்கள் நீண்ட நேரம் பரவினால், அது சம்பந்தப்பட்ட குழந்தையை மீண்டும் உளரீதியாக பாதிக்கச் செய்கிறது. 

இதில் குழந்தை பாதுகாப்பு நிறுவனங்கள் விரைவாக தலையிடவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், மேலும் சுரண்டலைத் தடுக்கவும் இந்த சட்டம் அனுமதிக்கிறது என்று அவர் கூறினார்.

16 வயதுக்குட்பட்ட பதின்பருவ குழந்தைகள் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் உள்ளனர்.

அங்கு அவர்கள் இணையத்தால் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அவர்களால் பெரும்பாலும் இணையம் மூலம் பரவும் ஆபத்து, குறித்தோ  நீண்டகால விளைவுகள் குறித்தோ முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.

அதனால்தான் உலகளாவிய குழந்தை பாதுகாப்பு தரநிலைகள் இந்த வயதினரை வலுவான இலக்கவியல் பாதுகாப்புகள் தேவை என்று கருதுகின்றன.

சிறார்களை இணையத்தில் யார் தொடர்பு கொள்ளலாம் என்பதற்கான வரம்புகள் போன்ற கடுமையான அணுகல் கட்டுப்பாடுகள் இப்போது அவசியம். இந்த நடவடிக்கைகள் மோசடிக்காரர்களை கட்டுப்படுத்துகின்றன.

இளைஞர்களுக்கு பாதுகாப்பான இணைய சூழல்களை உருவாக்குகின்றன.

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலக்கு வைக்கப்படாமலோ அல்லது சுரண்டப்படாமலோ கற்றுக்கொள்ள, ஆராய  சமூகமயமாக்கக்கூடிய இலக்கவியல் இடங்களை உருவாக்குவது முக்கியம் என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset