செய்திகள் மலேசியா
21 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பின் செமினி தோட்ட மக்களுக்கு சொந்த வீடுகள் கிடைத்தது: அருட்செல்வன்
செமினி:
21 ஆண்டுக்கால போராட்டத்திற்கு பின் செமினி தோட்ட மக்களுக்கு சொந்த வீடுகள் கிடைத்துள்ளது.
பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வன் இதனை கூறினார்.
கிட்டத்தட்ட 21ஆண்டுகளுக்கு முன் செமினி தோட்ட மக்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதனால் அவர்கள் தோட்ட வீடுகளை காலி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
இதில் பாதிக்கப்பட்ட 17 குடும்பங்கள் வீடுகளை காலி செய்து வெளியேறினர்.
அதேவேளையில் 17 குடும்பங்கள் சைம் டார்பி நிறுவனம் சொந்த வீடுகளை கட்டித் தர வேண்டும் என இறுதி வரை போராடியது.
இதன் அடிப்படையில் 17 குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் இலவசமாக வீடுகளை கட்டித் தந்தது.
மேலும் தோட்டத்தை விட்டு வெளியேறிய 17 குடும்பங்களுக்கு 42,000 ரிங்கிட் விலையில் வீடுகளை விற்பனை செய்யப்பட்டது.
பல இடர்களுக்கு பின் அந்த வீடுகள் அனைத்தும் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.
இன்று அந்த வீடுகளின் சாவி 34 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
இது பிஎஸ்எம் கட்சியும் முன்னாள் செமினி தோட்ட மக்களும் முன்னெடுத்த போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
குறிப்பாக சைம் டார்பி நிறுவனம் தோட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தந்ததும் இதுவே முதல் முறையாகும்.
இது எப்படி இருந்தாலும் செமினி தோட்ட மக்களுக்கு அனைவருக்கும் இன்று சொந்த வீடுகள் கிடைத்துள்ளது.
இதுவே நமது வெற்றியாகும். போராடினால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்று அருட்செல்வன் கூறினார்.
முன்னதாக எங்களுக்கு வீடுகள் கிடைக்க உதவிய சிலாங்கூர் மாநில அரசு, பிஎஸ்எம் கட்சி, அருட்செல்வன் உட்பட அனைவருக்கும் எங்களின் நன்றி என்று தோட்ட மக்கள் கூறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 10:44 pm
மலாக்கா துப்பாக்கி சூடு சம்பவம்; இன ஒடுக்குமுறையில் சகிப்புத்தன்மை இல்லை: பிரதமர்
December 13, 2025, 8:17 pm
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் சாதனை இளைஞர்களை உருவாக்கும் மைஸ்கில் அறவாரியத்திற்கு பாராட்டுகள்: குலசேகரன்
December 13, 2025, 8:16 pm
மைஸ்கில் அறவாரியத்தின் 7ஆவது பட்டமளிப்பு விழா; 250 மாணவர்கள் பட்டம் பெற்றனர்: பசுபதி
December 13, 2025, 3:37 pm
இணைய பாதுகாப்பு சட்டம் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்தும்: டாக்டர் சிவமுருகன்
December 12, 2025, 11:05 pm
பத்துகாஜா சேவை மையத்தினர் திருத்த மையத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்: வ.சிவகுமார்
December 12, 2025, 10:08 pm
