நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஹரிமாவ் மலாயா வீரர் ஜுனியர் எல்ட்ஸ்தால் காயத்தால் பாதிப்பு

சிங்கப்பூர்: 

ஹரிமாவ் மலாயா வீரர் ஜுனியர் எல்ட்ஸ்தால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இது மலேசிய அணிக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏஎப்எப் சுசூகி கிண்ண கால்பந்துப் போட்டியில் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது.

இதில் களமிறங்கிய ஹரிமாவ் மலாயா  அணியினர் முதல் ஆட்டத்தில் பிலிப்பைன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இரண்டாவது ஆட்டத்தில் ஹரிமாவ் மலாயா  அணியினர் இன்று லாவோஸ் அணியை சந்தித்து விளையாடவுள்ளனர்.

ஹரிமாவ் மலாயா  அணியின் முன்னணி ஆட்டக்காரர் கைரூல்ஹசான் காலிட், பைசால் ஹலிம் ஆகியோர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தவொரு சூழ்நிலையில் தேசிய ஆட்டக்காரர் ஜுனியர் எல்ட்ஸ்தால் தற்போது காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset