நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெஸ்ஸி, ரொனால்டோவை மிஞ்சும் சொத்து மதிப்பு 26 வயதில் மிரட்டும் கால்பந்து வீரர்

பேங்காக்:

உலகின் அதிக வருமானம் ஈட்டும் கால்பந்து வீரர்களில் இருவரான லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோவை மிஞ்சும் சொத்து மதிப்புடன் முன்னாள் செல்சி வீரர் ஒருவர் தாய்லாந்து அணிக்காக விளையாடுகிறார்.

மெஸ்ஸி, ரொனால்டோ இருவரும் கால்பந்து உலகில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். 

பார்சிலோனா, பிஎஸ்ஜி, இந்தர்மியாமியுடன் பல கிண்ணங்களை வென்றவர் மெஸ்ஸி.

அதேவேளை, ரியல் மாட்ரிட், மெசெஸ்டர் யுனைடெட், ஜூவாந்தஸ், அல் நசர் ஆகிய அணிகளுடன் ரொனால்டோவும் வெற்றிகளை குவித்துள்ளார். 

வெளியான தரவுகளின் அடிப்படையில் மெஸ்ஸியின் சொத்து மதிப்பு 680 மில்லியன் பவுண்டுகள் என்றே தெரிய வருகிறது.

இன்னொருபக்கம் ரொனால்டோவின் சொத்து மதிப்பு சுமார் 640 மில்லியன் பவுண்டுகள் என்றும் கூறப்படுகிறது. 

இவர்கள் இருவரின் சொத்து மதிப்பும் மொத்தமாக 1.32 பில்லியன் பவுண்டுகள் என கூறப்படும் நிலையில், 26 வயதே ஆன முன்னாள் செல்சி வீரரான பாய்க் போல்கியாவின் சொத்து மதிப்பு 16 பில்லியன் பவுண்டுகள் என கூறப்படுகிறது.

புரூணை சுல்தானின் மருமகனான இவர், சுல்தானின் மொத்த சொத்து மதிப்பான 200 பில்லியன் பவுண்டுகளில் குறிப்பிடத்தக்க ஒரு தொகையை கைப்பற்றுவார் என்று கூறுகின்றனர்.

சௌத்ஹாம்டன், செல்சி, லெய்செஸ்டர் சிட்டி ஆகிய அணிகளில் களமிறங்கியிருந்தாலும் பிரிமியர் லீக் களத்தில் அவரால் சாதிக்க முடியவில்லைகுறிப்பிடத்தக்கது.23 ஆம் ஆண்டு தாய்லாந்தின் ரட்சாபூரி  அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset