நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

8 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசிய கால்பந்து சங்கத்திலிருந்து வெளியேறுகிறார் கிறிஸ்டபர் ராஜ்

பெட்டாலிங் ஜெயா:

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசிய கால்பந்து சங்கத்திலிருந்து
வெளியேறுவதாக கிறிஸ்டபர் ராஜ்  அறிவித்துள்ளார்.

2024-2029 ஆண்டுக்கான மலேசிய கால்பந்து சங்கத் தேர்தலில்  நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிக்கு மலேசியாவில் 17 வயதுக்குட்பட்டோர் கால்பந்து அணி நிர்வாகி கிறிஸ்டோபர் ராஜ் பரிந்துரைக்கப்பட்டார்.

ஆனால் அதிகாரப்பூர்வமாக போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.

கடந்த  ஜனவரி 15ஆம் தேதி தான் மலேசிய கால்பந்து சங்கத்தின் நிர்வாக உறுப்பினராக  தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான கடைசி நாள்.

மேலும் மலேசிய கால்பந்திற்கு தங்கள் சேவைகளை அர்ப்பணிக்க மற்ற வேட்பாளர்களுக்கு இடமளிக்க இந்த அமைப்பை விட்டு வெளியேறுவதாகவும் அவர் அறிவித்தார்.

இவ்வேளையில் மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஹமிடின் முஹம்மதுக்கு எனது நன்றிகள்.

எனது சேவைக் காலத்தில் நான் பெற்ற வாய்ப்புகள், ஆதரவு, மதிப்புமிக்க அனுபவங்களுக்காக அவருக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.

என்னுடன் இணைந்து போராடிய மற்ற நிர்வாக குழு  நண்பர்களுக்கும் எல்லையற்ற நன்றிகள்.

அதே வேளையில் மலேசியாவின் கால்பந்து துறை உயர் நிலைக்கு கொண்டு செல்லுங்கள்.

இது தான் எனது கோரிக்கை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset