நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெஸ்ஸியின் வருகைக்கு பிறகு  எம்பாப்பே மாறிவிட்டார்: நெய்மர்

ரியாத்:

பாரிஸ் சையின்ட் ஜெர்மைன் அணியில் மெஸ்ஸியின் வருகைக்கு பிறகு கிளையன் எம்பாப்பே மாறிவிட்டார். அதே வேளையில் சண்டைகளும் வந்தது என்று நெய்மர் கூறினார்.

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் சமீபத்தில் பாரிஸ் சையின்ட் ஜெர்மைன் அணியில் விளையாடியபோது இருந்த அனுபவம் குறித்து பேசியிருக்கிறார். 

2021 இல் லியோனல் மெஸ்ஸியின் வருகைக்கு பிறகு நடந்த மாற்றங்கள் குறித்து வெளிப்படையாக பல விஷயங்களை பற்றி பேசியிருக்கிறார் நெய்மர்.

பாரிஸ் சையின்ட் ஜெர்மைன் அணியில் நானும் எம்பாப்பேவும் முதலில் ஒன்றாக விளையாடினோம்.

அப்போது எங்களுக்குள் நல்ல பழக்கம் இருந்தது. நானும் எம்பாப்பேவும் நெறைய விஷயங்களை பற்றி பேசுவோம்.

அவர் சிறந்த வீரர்களில் ஒருவராக இருப்பார் என கூறினேன். அவ்வப்போது நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவோம்.

ஆரம்ப காலகட்டத்தில் எங்களுக்கு இடையே நல்ல ஒற்றுமை இருந்ததாம். அதன் பிறகு லியோனல் மெஸ்ஸியின் வருகை அவரை மாற்றிவிட்டது.

மெஸ்ஸி அணியில் இணைந்த பிறகு எம்பாப்பே பொறாமைப்பட்டார். 

மெஸ்ஸி வந்த பிறகு எம்பாப்பேவிடம் நெறைய மாற்றங்கள் இருந்தது. அவர் சற்று பொறாமைப்பட்டார்.

நானும் மெஸ்ஸியின் பழகுவதை பார்த்து அவருக்கு சற்று பொறாமை இருந்தது என தெரிகின்றது.

இதனால் எங்களுக்குள் சிறிய சண்டைகளும் வந்தன என்று நெய்மர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset