நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

84ஆவது பரதன் கிண்ணத்தை திரெங்கானு அணி வென்றது

செலயாங்:

84ஆவது பரதன் கிண்ணத்தை வென்று திரெங்கானு அணியினர் சாதித்துள்ளனர்.

பரதன் கிண்ண இறுதியாட்டம் செலயாங் கால்பந்து அரங்கில் நடைபெற்றது.

இந்த இறுதியாட்டத்தில் திரெங்கானு அணியினர் நெகிரி செம்பிலான் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திரெங்கானு அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் நெகிரி செம்பிலான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இவ்வெற்றியை தொடர்ந்து திரெங்கானு அணியினர் பரதன் கிண்ணத்தை தட்சிச் சென்றனர்.

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார்.

மலேசிய இந்தியர் விளையாட்டுப் பேரவையின் துணைத் தலைவர் டத்தோ சிவசுந்தரம், உதவித் தலைவர் டத்தோ பதி உட்பட பல பிரமுகர்கள் இப்பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய செனட்டர் கந்தசாமி, 1940ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பரதன் கிண்ணம், மலேசியாவின் பழமையான கால்பந்து போட்டிகளில் ஒன்றாகும்.

கால்பந்து மூலம் விளையாட்டு, ஒற்றுமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுமேஜர் ஜெனரல் டாக்டர் பிரமதா நாத் பரதன் இப்போட்டியை தொடங்கினார்.

அவரது முயற்சிகள் மலேசிய கால்பந்தில் ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளது.

இந்தப் போட்டி நாட்டின் விளையாட்டு நாட்காட்டியில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகத் தொடர்கிறது.

இந்தப் போட்டி அடிமட்ட அளவில் கால்பந்தை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

மேலும் உள்ளூர் அணிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் மலேசியாவில் விளையாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் ஒரு தளத்தை வழங்குகிறது.

ஆகவே இப்போட்டி தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset