நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கிறிஸ்டியானோ ரொனால்டோ காயமடைந்தாரா? பயிற்சியில் பங்கேற்கவில்லை

ரியாத்:

அல் நசர் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அணியின்  பயிற்சிக்கு வரவில்லை.

இந்த ஞாயிற்றுக்கிழமை, சவூதி புரோ லீக்கின் 17ஆவது ஆட்டத்தில், அல் நசர் அல் ஃபாதே அணியை  எதிர்கொள்கிறது.

இந்நிலையில் எக்ஸ் தளத்தில், பத்திரிக்கையாளர் அலி அல் எனிசி கூறியதாவது, 

அல் நசர் அணி வரவிருக்கும் ஆட்டத்திற்கு முன்னதாக திட்டமிட்டிருந்த குழு பயிற்சியில் ரொனால்டோ கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். 

ரொனால்டோவின் காயம் பற்றிய கவலை இருந்தபோதிலும், இது ஒரு முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. 

அதிக போட்டிகளை தடுப்பதற்காக இறுதிப் பயிற்சியைத் தவிர்க்கப்பட்டிருக்கலாம். 

அவர் கடுமையான பயிற்சியைத் தவிர்த்துவிட்டு, இடைப்பட்ட காலத்தில் லேசான உடல் சீரமைப்பில் கவனம் செலுத்தலாம். 

இதன் மூலம் அவர் விளையாட்டில் பங்கேற்க முடியும் என கூறப்படுகிறது.

முன்னதாக அல் நசர் அணி 32 புள்ளிகளுடன், தற்போது சவூதி புரோ லீக் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset