நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக் ம இ கா கல்வி நிதியுதவியாக 4 இலட்சம் ரிங்கிட்டை ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறது: டான்ஸ்ரீ இராமசாமி

ஈப்போ: 

பேராக் மாநில ம இ கா கல்வியின் முக்கியதுவத்தை அறிந்து உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 3 அல்லது 4 லட்சம் ரிங்கிட்டை உயர்கல்வி மாணவர்களுக்கு நிதியுதவி செய்து வருவதாக நிதியுதவி வழங்கும் நிகழ்வில் பேராக் ம இ கா தலைவரும், ம இ கா வின் தேசிய உதவித்தலைவருமாகிய டான்ஸ்ரீ எம். இராமசாமி கூறினார்.

இம்மாதம் 7 மாணவர்களுக்கு சுமார் 2 இலட்சம் ரிங்கிட் கல்வி நிதியுதவியாக வழங்கப்பட்டது. இந்திய மாணவர்களை தவிர்த்து பிற இன மாணவர்களுக்கும் ம இ கா பாகுபாடின்றி உதவி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவுவதுடன், திவெட் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் ம இ கா வால் உருவான " டேப்" கல்லூரியில் இதுவரை சுமார் 47 ஆயிரம் மாணவர்கள் படித்து நன்மை அடைந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

ம இ கா எந்த வேறுபாடும் இல்லாமல் ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் "டேப்" கல்லூரியில் பயிலும் மாணவர்களை தவிர்த்து மற்ற உயர்கல்வி கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு உதவி வருவதாக அவர் சொன்னார்.

ம இ கா என்பது இந்திய சமூகத்தின் கட்சியாகும். ஆகையால், இந்நாட்டு இந்தியர்களின் தேவைகள் மற்றும் அவசியத்தை உணர்ந்து உதவி வருகிறது. குறிப்பாக, கல்வியின் அவசியத்தை உணர்ந்து நம் மாணவர்களுக்கு உதவி வருவதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset