செய்திகள் மலேசியா
6 வயது மகளுக்கு பாலியல் கொடுமை: பாதுகாப்பு காவலர் 13 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார்
ஜொகூர் பாரு:
ஆறு வயது மகளுடன் பாலியல் துன்புறுத்தல், பலாத்காரம், இயற்கைக்கு மாறான உறவு வைத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக 13 குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்பட்ட பாதுகாப்பு காவலர் ஒருவர் நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜனவரி 22 முதல் பிப்ரவரி 17 வரை தனது காதலியுடன் சேர்ந்து ஆறு வயதுடைய தனது சட்டப்பூர்வமற்ற மகளுக்கு உடல் ரீதியான பாலியல் துன்புறுத்தல் செய்ததாக 43 வயதான அந்த ஆடவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, ஜனவரி 23 முதல் பிப்ரவரி 16 வரை பாதிக்கப்பட்ட சிறுமி முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்டதன் மூலம் உடல் ரீதியற்ற பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிப்ரவரி 16, 17 ஆகிய தேதிகளில் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் இயற்கைக்கு மாறான உறவில் ஈடுபட்டதாக இரண்டு குற்றச்சாட்டுகளும் அவ்வாடவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அதோடு, ஜனவரி 22, பிப்ரவரி 23 ஆகிய தேதிகளில், சிறுமியின் சம்மதமின்றி குழந்தை பாலியல் துஷ்பிரயோக பொருட்களைத் தயாரித்ததாக இரண்டு குற்றச்சாட்டுகளும், பிப்ரவரி 17 அன்று பலாத்காரம் செய்ததாக ஒரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிகழ்ந்த உடல் ரீதியான பாலியல் துன்புறுத்தல் குற்றத்திற்கு 2017 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் (AKSTKK) பிரிவு 14(b)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உடல் ரீதியற்ற பாலியல் துன்புறுத்தல் குற்றத்திற்கும் அதே சட்டத்தின் பிரிவு 15(c)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இயற்கைக்கு மாறான உறவு குற்றச் சட்டத்தின் பிரிவு 377Cன் கீழ் கடுமையான குற்றமாக கருதப்படுவதுடன், ஐந்து முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
குழந்தை பாலியல் துஷ்பிரயோக பொருட்கள் தயாரித்த குற்றம் AKSTKK 2017 சட்டத்தின் பிரிவு 5ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை பலாத்கார குற்றமும் குற்றச் சட்டத்தின் பிரிவின் 376(3) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த அனைத்து சம்பவங்களும், கடந்த ஜனவரி 22 இரவு 11.35 மணி முதல் பிப்ரவரி 17 காலை வரை, கம்போங் கெம்பாஸ் பாரு அருகிலுள்ள ஒரு வீட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
வழக்கின் விவரங்கள், தண்டனை தொடர்பான விசாரணைக்காக மார்ச் 4 அன்று மீண்டும் வழக்கு குறிப்பிடப்படும் என நீதிமன்றம் அறிவித்தது. வழக்கறிஞர் இல்லாத அந்தக் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட சிறுமியின் பாதுகாவலராக இருந்த குற்றவாளியின் காதலியும் சிறுமியை அலட்சியப்படுத்தி உடல் காயம் ஏற்படச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டார்.
2001 ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a)ன் கீழ் அந்தப் பெண் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் RM50,000 அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 2, 2026, 10:27 pm
எகிப்து, ஜோர்டானில் உள்ள 540 மாணவர்களின் நிலையை ஜொகூர் அரசு கண்காணித்து வருகிறது
March 2, 2026, 10:25 pm
பூடி95 பெட்ரோல் திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 14.8 மில்லியன் பேர் பயனடைந்துள்ளனர்: அமீர் ஹம்சா
March 2, 2026, 10:24 pm
பிரதமரின் பதவிக் காலத்தைக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தோல்வி: இரண்டு வாக்குகள் தவறிவிட்டன
March 2, 2026, 10:23 pm
செந்தோசாவில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்; மக்களின் ஒற்றுமையை ஊக்குவிக்கிறது: குணராஜ்
March 2, 2026, 10:22 pm
இன, மதங்களுக்கு இடையிலான சர்ச்சைகள் களையப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்
March 2, 2026, 5:38 pm
சபாக் பெர்னாமில் சட்டவிரோத குடியேறிகள்: உள்நாட்டு ஆடவர் கைது
March 2, 2026, 3:30 pm
AKPS கமாண்டர் மீது துப்பாக்கிச் சூடு வழக்கு: ஐந்து சாட்சிகள் வாக்குமூலம் வழங்கினர்
March 2, 2026, 3:29 pm
தடை செய்யப்பட்ட பொருள் கடத்தலுக்கு லஞ்சம்: அரசு ஊழியர்கள் கைது
March 2, 2026, 2:53 pm
