நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

AKPS கமாண்டர் மீது துப்பாக்கிச் சூடு வழக்கு: ஐந்து சாட்சிகள் வாக்குமூலம் வழங்கினர்

கோலாலம்பூர்: 

கடந்த புதன்கிழமை புக்கிட் காயு ஹித்தாம் எல்லை கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமை (AKPS) கமாண்டர் ஓட்டி சென்ற புரோட்டான் X70 காரின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ இதுவரை ஐந்து சாட்சிகள்  வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

 சம்பந்தப்பட்ட அனைத்து சாட்சிகளும் இந்த வழக்குடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்று கெடா மாநில காவல்துறை தலைவர், டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.

“மேலும், சந்தேக நபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் புதிய சந்தேக நபர்கள் உள்ளார்களா என்பதையும் போலிசார் அடையாளம் காண முயற்சித்து வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாகத் தாய்லாந்து பெண் ஒருவர் உட்பட ஏழு சந்தேக நபர்களைப்  போலிசார் கைது செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

 அவர்கள் கெடா மாநில காவல் துறையின் குற்றப் புலனாய்வின் (JSJ) சிறப்பு விசாரணைப் பிரிவு (D9) நடத்திய ‘Ops Tutup’ நடவடிக்கையில் கைது செய்யப்பட்டதாக அட்ஸ்லி கூறினார்.

கணவன்-மனைவி இருவரும் தப்பிச் சென்று அண்டை நாட்டுக்குள் நுழைய முயன்றபோது பெர்லிஸ் மாநிலம் பாடாங் பெசார் எல்லைச் சோதனைப் பகுதியில் மதியம் 12.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர் என்றார் அவர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset