நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தடை செய்யப்பட்ட பொருள் கடத்தலுக்கு லஞ்சம்: அரசு ஊழியர்கள் கைது

கோலா திரெங்கானு:

 போதைப்பொருள் மீட்பு மையத்தில் பணியாற்றும் அரசு ஊழியர் ஒருவர், மையத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கடத்துவதற்காகச் சுமார் RM6,000 ஊழல் பணம் கோரி பெற்றதாகத் திரெங்கானு மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தால் (SPRM) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுளார்.

இன்று கோலா திரெங்கானு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் SPRM தாக்கல் செய்த கோரிக்கையின் பேரில், சம்பந்தப்பட்ட சந்தேக நபரை மார்ச் 7 வரை ஆறு நாட்கள் தடுப்பு காவலில் வைக்க நீதிபதி இஃபா நபிஹா முஹம்மத்  இஷாக் உத்தரவிட்டுள்ளார்.

30 வயதான பெண் உட்பட 40 வயதான ஆண் ஊழியரும் நேற்று மதியம் 12.30 மணிக்கு திரெங்கானு மாநில SPRM அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனர்.

"நேற்று SPRM திரெங்கானு மாநில போதைப்பொருள் மீட்பு மையத்தில் பணியாற்றும் இரு அரசு ஊழியர்களையும் கைது செய்தது. கைது செய்யப்பட்ட ஆடவர் இன்று உடல்நிலை சீரில்லாத காரணத்தினால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்," என தெரிவிக்கப்பட்டது.

ஆரம்பக்கட்ட விசாரணையில், இந்த இரு சந்தேக நபர்களும் 2024 செப்டம்பர் முதல் 2025 ஜனவரி வரை மையத்தில் இருப்பவர்களின் குடும்பத்தாரிடமிருந்து பணத்தைப்  பெற்றதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

மையத்திற்கு மதிய உணவு வழங்குவதற்கான பொருட்கள் மூலம் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வரும் வழியை அவர்கள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

 இந்த வழக்கு SPRM சட்டம் 2009 பிரிவு 17 (a) படி விசாரணை செய்யப்படுவதாகத் திரெங்கானு மாநில SPRM இயக்குநர் ஹஸ்ருல் ஷாஸ்ரீன் அப்துல் யாஸிட் தெரிவித்துள்ளார். 

"மற்ற எந்த நபர்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என அறிய, முழுமையான விசாரணை தொடரப்படும்," என்றார் அவர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset