நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இன, மதங்களுக்கு இடையிலான சர்ச்சைகள் களையப்பட வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

நாட்டில் இன, மதங்களுக்கு இடையிலான சர்ச்சைகள் களையப்பட வேண்டும்.

சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

நாட்டில் ஆலயங்கள் தொடர்பான விவகாரங்கள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

அதே வேளையில் பல்கலைக்கழக மாணவர் ஒரு அல்-குர்ஆனை அவமதித்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது கண்டத்துக்குரியது.

பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் இதுபோன்ற சம்பவங்கள் நல்லது அல்ல.

அதன் அடிப்படையில் இன, மதங்களுக்கு இடையிலான சர்ச்சைகள் களையப்பட வேண்டும்.

அனைத்து இன மக்களும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

குறிப்பாக இதுபோன்ற சர்ச்சைகளை ஏற்படுத்துவோர் மீது போலிஸ் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset