நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திருவள்ளுவர் சிலை விவகாரத்தை தொடர்ந்து சர்ச்சையாக்க வேண்டாம்: டத்தோ சிவக்குமார்

காஜாங்:

திருவள்ளுவர் சிலை விவகாரத்தை யாரும் தொடர்ந்து சர்ச்சையாக்க வேண்டாம்.

மஹிமா தலைவரும் டிஎஸ்கே சமூக நல அமைப்பின் தலைவருமான டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.

காஜாங் தமிழ்ப்பள்ளியில் திறன்மிகு மாணவர் விருது விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

கல்வி தேர்வுகளில் சிறந்த விளங்கும் மாணவர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விழா நடைபெற்றது.

இந்த விழாவை தொடக்கி வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த விழாவை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகத்திற்கும் அதே வேளையில் சாதித்த மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் காஜாங் தமிழ்ப்ள்ளியின் வளர்ச்சிக்கும் மாணவர்கள் நலத்திட்டங்களுக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என்று அவர் கூறினார்.

இதனிடையே ஜொகூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலைகளை அகற்ற வேண்டும் என செய்திகள் வெளியாகின.

இந்த செய்திகள் இந்திய சமூக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மஹிமா தலைவர் என்று அடிப்படையில் இந்த விவகாரம் தொடர்பில் நான் கருத்துக்களையும் ஆதங்கங்களையும் வெளிப்படுத்தியிருந்தேன்.

இந்த நிலையில் ஜொகூர் மாநில கல்வி இலாகா இது போன்ற உத்தரவுகளை நாங்கள் பிறப்பிக்கவில்லை என்று அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

ஆக இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் திருவள்ளுவர் சிலை விவகாரத்தில் தொடர்ந்து யாரும் சர்ச்சையாக்க வேண்டாம்.

குறிப்பாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல்களை பதிவிடும் போது அதன் உண்மைகளை ஆராய்வது முக்கிய அம்சமாக உள்ளது.

காரணம் இதனால் மற்றவர்களிடையே மன கசப்புகளை தவிர்க்க முடியும் என்று டத்தோ சிவக்குமார் கேட்டுக்கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset